பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

易强Q சடகோபன் செந்தமிழ் யாலே அப்போதே அப்படிச் செய்திலன். விரோதியான சம்சாரத்தில் ஏற்பட்ட அந்த ருசி இன்மை இவ்வளவும் வர நிலைநின்றபடி சொல்லுகின்றது. மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ! வண்குறிஞ் சியிசை தவரு மாலோ: செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ! செக்கர்கன மேகங்கள் சிதைக்கு மரலோ! அல்லியந் தாமரைக் கண்ணன்னம்மான் ஆயர்கள் ஏறரியேறெம் மாயோன் புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமிய மாலோ! (கமழ் மணம்வீசும் சருதல் அறுத்தல்; தவரும் - துளைக்கின்ற; மயக்கும் மோகிக்கச் செய்யும்; செக்கர் - செந்நிறம்: அல்வி - மலர்ந்த, அரிஏறு. சிங்கஏறு: புல்லிய முன்பு அணைந்த தமியம் - பிரிந்து வருந்திக் கிடந்து தனிமைப் பட்டோம் ) என்பது முதல் பாசுரம். இதில் மாலைப் பொழுதில் தென்றல் முதலான பொருள்கள் தனித் தனியே தனக்கு நலிவை விளக்கும்படியைச் சொல்லிக் கதறுகின்றாள் ஓர் ஆய்ச்சி. மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ : எனக்கொரு துணையின்றியே தென்றலே தனியாய் நின்று நவியக் கூடும். அது மல்லிகை மணத்தையும் துணை கொண்டால் நலியும் விதம் சொல்லலாகுமோ? கூடியிருக்குங் காலத்து பரம போக்கியமாயிருந்து பரமானந்தத்தை விளைக்கும் பொருள்க ளெல்லாம் பிரிவுக் காலத்தில் துயரத்தை விளைக்கும் என்பது யாவரும் அறிந்ததே. - வண்குறிச்சி இசைதவரும் : குறிஞ்சி, மருள், காமரம், கந்தாரம் என்பவை பண்களின் பெயர்; தோடி, சாவேரி, பைரவி, சங்கராபரண்ம் என்று சங்கீதப் புலவர்கள் இராகங் களுக்குப் பெயர் வழங்குமாப்போலே வண்டு, குயில்