பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 29: முதலானவற்றின் பண்கள் குறிஞ்சி, மருள், காமரம், கந்தாரம் முதலான சொற்களால் வழங்கப்படுவதை நாலாயிரத்தில் காண்கின்றோம். செல்கதிர் மாலையும் மயக்கும் பக ற்போதாயிருந்தால் கண்ட பொருள்களையெல்லாம் பார்த்துக் கொண்டும் கண்டாரோடும் பேசிக் கொண்டும் ஒருவாறு பொழுது போக்கலாம். அதற்கு அவகாசம் இல்லாதபடி சூரியன் மறையும்படியான மாலைப்பொழுதிதி வந்து மயங்கா நின்றது: செக்கர்கன் மேகங்கள் சிதைக்கு மாலோ : மாலை நேரத்தின் செந்நிறத்தையும் கருமையான நிறத்தையும் உடைய முகிற் கூட்டங்கள் அவனுடைய அவயவங்களின் காந்திக்கும் போலியாய் இவை என் அம்பு செய்தது என்து அவற்றைப் பழித்துக் கொண்டு சரீரம் கிடக்கவோ நலிவது: என்று வயிரத்தைச் செற்றா நின்றது. - அல்லிஅம் தாமரைக்கண்ணன் முதலில் உறவு செய்வன கண்களே யன்றோ? கண்ணொடு கண்ணினைக் கெளவி ஒன்றையொன்று உண்டபின் அன்றோ மெய்யுது புணர்ச்சி உண்டாவது? - அடுத்துவரும் பாசுரங்களில் மணி ஒலி, தென்றல் ஆம்பல், சந்தனம். தீங்குழவின் ஓசை (3), வாடை, சந்திரன், மலர்ப் படுக்கை அழகிய பூ (4), ஆபுகு மாலை . ஆயன் தீங்குழல் (5). மாலை (6), வாடை, அகிற்புகை, யாழ்நரம்பின் ஒசை பஞ்சமப் பண், பசிய சந்தனம், மல்லிகை {7), செவ்வானம், வாடை, மல்லிகை, வளவிய சந்தனம் (8), மணியொலி, வேய்ங்குழலோசை, முல்லை, கருமுகை, மல்லிகை, வண்டின் ஒலி கடல் ஒலி (10) - இவை யாவும் நலியும்படியைப் பேசு கின்றாள் ஆழ்வார் நாயகி. இந்தப் பதின்மூன்று பதிகங் களும் எம்பெருமானைக் இட்டியல்லது தரியேன்” என்ற தலைவியின் பதற்றத்தைப் புலப்படுத்துவன வாகின்றதைக் கண்டு மகிழலாம்.