பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை 293 சேர்ப்பாரைப் பட்சிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகுஎன்று, குரு ஸ்ப்ரஹ்மசாரி புத்ர சிஷ்ய ஸ்தானே பேசும். (சூத்திரம் - 156) (ஸ்ப்ரமசாரி - ஒரு சாலை மாணாக்கர்; ஸ்தாதே . இடத்தில்i என்று குறிப்பிடுகின்றது. விண்ணோர் பிரானார், மாசுஇல் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே (திரு. விருத். 55) என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமையால் பசிவித் விஷ்யத்தில் கொண்டு சேர்க்குமவர்கள் பறவை கள்ாகக் கொள்ளப் பெறுவர். இரண்டு சிறகுகளைக்கொண்டு பறவைகட்கு எங்ங்ம்ை விசும்பில் பறந்து செல்லுதல் இயலு: கின்றதோ அங்ங்னமே ஞானம், ஒழுக்கம் (அநுட்டானம் என்னும் இரண்டாலும் இறைவன் அடையப் பெறுகின்றான் என்பது ஆன்றோர் கொள்கை. எனவே, ஞானத்தையும் அநுட்டானத்தையும் சிறகுகளாகக் கொள்ளல் வேண்டும். ஆசாரியர்களும் ஒரு சாலை மாணாக்கர்களும், புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப் பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கருத்தாகும். மேற்குறிப்பிட்ட பறவைகளிலும் அன்னம் வண்டு முதலியவையாகச் சொல்லப் பெறுபவர்கள் இன்னார் இன்னார் போன்றவர்கள் என்னும் உள்ளுறைப் பொருளும் அருளிச் செய்யப்பெற்றுள்ளது. அவற்றை ஈண்டு குறிப் பிடுதல் மிகவும் பொருத்தமாகும். அன்னமாகப் பேசப் பெறுபவர்கள் செல்வ நம்பி, பெரியாழ்வார், நாதமுனிகள் ஆளவந்தார் ஆகியோர். நாரதமுனிவர், உலோகசாரங்க 1. ஆ. ஹி. 151. சூத்திர உரையில் விளக்கக் தரப் பெற்றுள்ளது. -