பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை 295 செளந்தர்யங்களை உணர்த்தும் வியூகவிபவ பரத்துவ துவய அர்ச்சைகள் தூது காலுக்கும் விஷயம் (சூத்திரம் - 156) (துவயம் - இரண்டு). என்று ஆசாரிய ஹிருதயம் கூறும். இதற்கு நிரல் நிரையாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். தம்பிழையை மறப்பித்த சுமையை உணர்த்தும் வியூகம் தூது (நான்கனுள் முதல் துண்துக்கு விஷயம்) என்றும், சிறந்த செல்வத்தை மறப்பித்த தீகைடியை உணர்த்தும் விபவம் தூது (நான்கனுள் இரண் டாவது தூதுக்கு விஷயம் என்றும், படைத்த பரப்பை மறப்பித்த சாரஸ்யத்தை உணர்த்தும் பரத்துவ துவகம் தாது (நான்கனுள் மூன்றாவது தூதுக்கு) விஷயம் என்றும், தம்ரோட்டை மறப்பித்த செளந்தர்யத்தை உணர்த்தும் அர்ச்சை தூது (நான்கனுள் நான்காவது தூதுக்கு) விஷயம் என்றும் கொள்க. மறப்பித்த உணர்த்தும் என்ற சொற் களை முன்னே உள்ள சொற்களோடு தனித்தனியே கூட்டுக. "துனது நாலுக்கும் என்றது, தாது விடுகின்ற நான்கு திருப்பதி கங்களை. இப்படி எம்பெருமான் தூது விடும்படி முகம் 6. ஐந்து கிலைகள் எம்பெருமானின் திருமேனி பரம், விழ்கம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை தி: ஐந்து நிலையில் இருக்கும். பரம் என்பது விேகுந்தத்தில் எழுந்தருளியிருக்கும். பாவது தேவனுடைய உருவம். வியூகம் என்பது, வாத தேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்நன், அதிருத்தின் உருவங்கள் (திருபாற்கடலில் இருப்பவை). விபவம் என்பது, எண்ணற்ற அவதாரி மூர்த்திகள்: அந்தர்யாமி என்ப்து, எல்லோருடைய இதய கமலத்தில் எழுந்தருளியிருக்கும். நிலை. அர்ச்சை, யென்பது திவ்வில் தேசங்க்ளில் திருமேனி கொண்டு எழுந்தருளியுள்ள நிலையும், ம்ற்றும் பக்தர்களின் வேண்டுகோளின்படி அ விர வர் விருப்பத்திற். கேற்றவாறு திரும்ேனி கொண்டு நிற்கும் நிலையும்,