பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 சடகோபன் செந்தமிழ் காட்டாமைக்குக் காரணம் தம்பிழை, சிறந்த செல்வம் , படைத்த படைப்பு, தமரோட்டைவாசம். தூது விடு கைக்குப் பற்றாசு என்றது சுமை: தீrை, ஸாரஸ்யம், செளந்தர்யம் என்பவையாகும். அதற்கு விஷயம் என்றது வியூக விபவ பரத்துவ துவய அர்ச்சைகளை,'பரத்துவதுவயம்’ என்றது. பரமபதத்திலிருக்கும் நிலையினையும், கரந்த சில்லிடந்தோறும் இடம் திகழ் பொருள்தோறும் கரந்து எங்கும் பரந்துறையும் அந்தர்யாமித்துவ நிலையினையும் குறிக்கும். இவ்விரண்டும் முதன்மைக்கு அறிகுறிகள் ஆதலின் பரத்தவ துவயம் என்கின்றார். இதனை மேலும் விளக்குவோம். - 1. வியூகத்தில் தூது : அஞ்சிறைய மடநாராய்' (1.4) என்ற திருவாய்மொழியில் கடல் ஆழி நீர் தோற்றி : அதனுள்ளே கண் வளரும் அடலாழி அம்மானைக் கண்டக்கால் (10) என்பதால் வியூகத்தில் தாது அறியக் கிடக்கின்றது. என் பிழையே நினைத்தருளி' (7) என் பதனால் எம்பெருமான் தனது சீலகுணத்தினால் முதலில் ஆழ்வாருடன் கலந்து விட்டான்; கலந்த பிறகு அவரிடமுள்ள குற்றங்களைக் கண்டான். அதனால் அவரை வெறுத்துப் பிரியலுற்றான். அவனிடத்தில் பொறுக்கும். பண்பு (rமை குணம்) நிரம்பியிருக்கும்போது ஆழ்வாரின் பிழைகளைப் பொருட்படுத்தக் காரணம் இல்லை. தன்னுடைய பிழைகள் அவனுடைய பொறுக்கும் பண்பையும் மறப்பித்தனபோலும் என்று கருதிய ஆழ்வார் நாயகி அப்பெருங் குணத்தைச் சிறிது நினைப்பூட்டி விட்டால் போதும் என்று நினைத்துப் பறவை களைத் தூது விடுகின்றாள். சீதாப்பிராட்டியை ஆயிரக் கணக்கான வானரங்கள் தேடுவதைப் போலவே, தன் கண்களில் கண்டவற்றையெல்லாம் துரது போகுமாறு ஏவு. கின்றாள் ஆழ்வார் நாயகி. பறவைகளைத் தூதுவிடும் ஐதிகத்தைக் குறிப்பிடும் பராசர பட்டர், "சக்கரவர்த்தித்