பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-துர்துபற்றியவை 297 திருமகனார் திருவவதரித்தபின்பு வாணர ஜாதி வீறுபெற்றது போல, ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு பட்சி ஜாதி வீறுபெற்றது” என்று சுவையுடன் அருளிச் செய்வர், இத் திருவாய்மொழியில் நாரை, குயில், அன்னம், அன்றில், குருகு, வண்டு, கிளி, பூவை ஆகிய பறவைகளைத் துாது விடுவதைக் காண்கின்றோம். . . நஞ்சீயர் காலத்தில் சாமான்யமாயிருப்பான் ஒருவன். விரக்தர்களும் வைதிகர்களுமான மகான்கள் பலரும் திருவாய்மொழி காலட்சேபத்தில் இது தத்துவ பரமாயிருக்கு ம்ென்று கருதி இத்திவ்விப் பிரபந்தத்தைச் சேவித்து வந்து, இத்திருவாய்மொழியில் வந்தவாறே இது காமுக வாக்கிக மாயிருக்கிறது என்று வெறுப்புக் காட்டிச் சென்றானாம். வேதாந்தங்களில் விதிக்கப்படுகிற பகவத் காமமே இப்படிப் பட்ட பாசுரங்களாகப் பரிணமித்ததென்று அவன் அறிந்திலன் கருவிலே திருவில்லாமையாலே - என்று நம்பிள்ளை வருந்திப் பேசுவர். . . பிரிவாற்றாமையுடன் இருக்கும் பராங்குச நாயகி நெய்தல் நிலத்தில் இருக்கின்றாள். பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலன்றோ? நீர்நிலத்தருகே இரா நின்ற ஆழ்வார் நாயகி அண்மையிலிருக்கும் நாரையைப் பார்த்து. 'நாராய்?நீ என் நிலைமையைக் கருடக் கொடியானுக்கு அறிவித்து என்னையும் அவனையும் சேர்க்க வேண்டும்’ என்துச் இரக்கின்றாள்: அம்சிறைகமடகாராய் அளிய்த்தாய் வுேம்கின் அம்சிறைய சேவலுமாய் ஆஆஎன்று எனக்கருனி