பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 சடகோபன் செந் தமிழ் என்ற பரகால நாயகின் வாக்கும் (பெரி.திரு. 9.4 : 2) ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. ஒருத்தி மதியெலாம் உள்கலங்கி மயங்குமால்' என்ற செய்தியைக் கூறி வருமாறு பணிக்கின்றாள். ஒருத்தி: என்றால் தெரியுமோ? இன்னாள் என்று குறிப்பிட வேண்டாவோ? என்னில்: வேண்டா: ஒருத்தி என்ற போதே அவள் பராங்குச நாயகி என்று அறிந்து கொள்வான். இங்ஙனம் மதியெலாம் உள் கலங்கி மயங்கும்படியாகத் தன்னால் செய்து வைக்கப் பெற்றவள் இந்நிலத்தில் பராங்குசநாயகி ஒருத்தி தவிர, வேறு யாரும் இல்லையா தலால் சிறப்பித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே நம்பிள்ளை ஈடு: “ஒருத்தி என்றால் அறியுமோ? என்னில் : எய்தவன் கை உணராதோ? இன்ன காட்டிலே மான் பெடை ஏவுடனே கிடந்து உழையா நின்றதென்று ஊரிலே வார்த்தையாடினால் எய்தவன் கை உணராதோ? "நீயன்றோ எய்தாய்’ என்று சொல்ல வேண்டாவிறே.” பாசுரத்தின் இறுதி அடியின் நயத்தையும் காண்போம். 'ஒருத்தி அறிவு கலங்கினாள்’ என்று கூறுங்கள். அது கேட்ட எம்பெருமான் தன்னதான அறிவு கலங்கப் பெற்றாலும், நாம் கொடுத்த அறிவு இருக்குமே; அதுகொண்டு ஆறி யிருப்பன்' என்பன்; அப்போது மதியெலாம் கலங்கிற்று என்று கூறுங்கள். அது கேட்ட எம்பெருமான் நாம் கொடுத்த அறிவு அப்படிக் கலங்கி விடாது; கலங்கினாலும் மேலெழச் சிறிது கலங்குமேயல்லது உள்ளே கம்பீரமாகவே இருக்கும் என்பன். அப்போது மதியெலாம் உள்கலங்கிற்று' என்று எடுத்து இயம்புங்கள். அது கேட்ட எம்பெருமான் *எல்லாம் கலங்கிப் போனால் என்ன? நாம் இருக்கிறோம். பின்பு நாம் அணுகும்போது அறிவு கொடுத்துக் கொள்ளு கிறோம் என்பன். அப்போது மயங்குமால்' என்று கூறுங் கள். அதாவது முடியும் தருணமாயிற்று' என்று விளக்குங்