பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்தாதுபற்றியவை 305 வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் செய்கொள் செந்நெல் உயர்திரு வண்வண் டுர்உறையும் கைகொள் சக்கரத்தென் கனிவாய்ப் பெரு மானைக் கண்டு கைகள் கூப்பிச் செல்லீர் வினையாட்டியேன் காதன்மையே (1) (வைகல் - எப்போதும்; கழிவாய் - கழியில்; கழிகடலையடுத்த நீர்ப்பரப்பு: செய்கொள் - கழனி நிரம்பிய, வினையாட்டி - பாவமுடையவள்; காதன் மை ஆவல்} குருகினங்கள் மேய்வது நீர்க்கரையிலாகையால் பூங்கழி வாய் வந்து மேயும் குருகினங்காள்!" என்று விளிக்கின்றாள். பூங்கழி என்பது எழிலார்ந்த நிலையைக் காட்டுகின்றது. வைகல் வந்து மேயும் - எப்போதும் நீங்கள் உணவை மாத்திரமா நோக்குவது? பிறர் காரியமும் சிறிது செய்ய வேண்டாவோ? என்று காட்டுகிறபடியும் இதில் தொனிப்பதைக் காணலாம். திருவண் வண்டுருக்குத் துரது போக வேண்டும் என்கின்றாள். குருகினங்கட்கு அங்குக் கொள்ளையாய் உணவு கிடைக்கும் என்பதைச் செய்கொள் செந்நெலுயர் என்ற அடைமொழியால் பெற வைக் கின்றாள். அங்குள்ள எம்பெருமானை அறிந்து கொள் வதற்கு இரண்டு அடையாளங்களைக் குறிப்பிடுகின்றாள். இழ்த்திருவாய்மொழியில் (5. 10) பிறந்தவாறும் என்று கண்ணன் அவதாரத்தை அநுசந்தித்து ஈடுபட்டவளாகை யால் கையும் திருவாழியுமாக அவதரித்தபடி திருவுள்ளத் தில் ஊறியிருக்கிற படியால் கைகொள் சக்கரத்து என்று முதலில் அவ்வடையாளத்தைக் கூறுகின்றாள். அடுத்து, - 20 خسته