பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 சடகோபன் செந்தமிழ் வளர்ந்தவாறும் என்று ஆயர்பாடியில் வளர்ந்த படியை அதுசந்தித்தவளாகையால் அவ்விடம் புகுந்து அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க் கொவ்வைக் * கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்த படிகளெல்லாம் திருவுள்ளத் தில் நிழவிட்டுத் தோற்றியிருப்பதனால் கனிவாய் என்ற அடையாளத்தைக் கூறுகின்றாள். அப்பெருமான் தன்னிடம் வந்தபோது பல்வேறு கள்ளக் குழைச்சல்கள் காட்டித் தன்னுடைய செளசீல்யம் தோற்ற இருந்தான்; இப்போது பிரிந்து இருக்கும் நிலையில் பரத்துவம் பாராட்டி நிற்கின்றான். அதற்கேற்றவாறு கைகள் கூப்பிச் சொல்லீர்’ என்று குருகினங்கள் விண்ணப்பிக்கும் முறையையும் சொல்லித் தருகின்றாள். இன்னாள் உம்மை ஆசைப்பட்டிருக்கின்றாள் என்று தெரிவித்தால் போதும் என்கின்றாள். இங்கே நம்பிள்ளை ஈடு: "வன்னெஞ்சர்க் காதல் போலன்றிறே மென்னெஞ்சர்க் காதல்; மெல்வியலார் காதல் அளவல்லாத என் காதல் சொல்வீர்; சொல்லுவார் தாழ்வே: வரவு தப்பாது என்றிருக் கின்றாள்' என்பது. எல்லாக் காலங்களிலும் இன்பம் நுகரும் இடங்கட்குத் தாங்களே சென்று தங்களைப் பிரியில் தரியாத அன்புடைய சீடர்களுடனே கூடப் பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகின்ற தூய்மையான இயல் புடைய ஆசாரியர் ஒருவரை விளித்துத் தனக்கு இறைவனோடு சம்பந்தம் வேண்டும் என்று அடிபணிந்து கேட்டல் இதற்கு உள்ளுறையாகும்." பராங்குச நாயகின் கண்வட்டத்தில் சில குயில்கள் தென்படுகின்றன. அவற்றை நோக்கிப் பேசுகின்றாள்: :: 9. ஆ. ஹி. 154 -இல் இந்த உள்ளுறையினி விரிவு காணலாம். :