பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

átēఖి பாசுரங்கள்-தூதுபற்றியவை 覆雳 போற்றி யானிரந்தேன் புன்னை மேலுறை பூங்குயில்காள்! சேற்றில் வாளை துள்ளும் திருவண் வண் டுர்உறையும் ஆற்றல் ஆழி அங்கை அமரர்பெரு மானைக்கண்டு மாற்றம் கொண்டருளிர் மையல் - தீர்வதொரு வண்ணம்ே (6) (பூகுயில் அழகிய குயில்; ஆற்றல் - சக்தி மிகுந்த ஆழி. சக்கரம்; மையல் - காதல்; மாற்றம் - வார்த்தை; திருவண்வண்டுகில் சென்று எம்பெருமானைக் கண்டு தன் நிலைமையை அறிவித்து அத்தலையினின்றும் ஒரு வார்த்தை கொண்டு வந்து தனக்குரைத்துத் தன் மையலைத் தீர்க்க வேண்டும் என்று இரக்கின்றாள். புன்னை மேலுறையும் பூங்குயில்கள் : வளர்த்ததனால் பயன் பெற்றேன். (திருநெடுந். 14) என்னுமாப்போலே ஆசிரியர் பக்கலிலே வளருபவர்கள் (உள்ளுறையில்) குயிலாகச் சொல்லப்பெறுவர். குயில்கட்கு வடமொழியில் பரப்ருதம் என்று பெயர். காக்கையின் கூட்டிலே கொண்டு விடப்பெற்று அவற்றால் உணவூட்டப்பெற்று வளருபவை யாதலால் இப்பெயர் பெற்றது. அதுபோல ஆசாரியனால் வளர்க்கப்பெற்று வளரும் குருகுலவாசிகளைச் சொன்ன தாஇன்றது. புன்னை மேலுறை என்றது புன்னையின் கீழ் உறை என்றவாறு. இதில் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. நம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் ஒரு மிடறாக ஈடுபட்ட தலமாகிய திருவரங்கம் பெரிய கோயிலில் திருப்புன்னை மரம் நெடுநாளாக இருப்பது யாவரும் அறிந்ததே. பட்டரும் ரீரங்கராஜஸ்தவத்தில் இப்புன்னை மரத்தை வருணிக்கின்றார். முன்புள்ள நம் முதலிகள் எல்லாரும் இப் புன்னையின் இழிருந்து பகவத் விஷயார்த்தம் பற்றிய கி"