பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை 3{}9 என்று பணிக்கின்றாள். எமது தலைவர் பெண்பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக் கட்டி விட்டோம் என்றிருப்பர்; அப்படியன்றிக்கே இரட்சக வர்க்கத்தில் நானும் ஒருத்தி இருப்பதாகச் சொல்லுங்கள்” என்கின்றாள். "நான் பல பறவைகளையும் நோக்கித் துரது போம்படி இரந்ததுண்டாகிலும் இப்போது வண்டுகளான உங்களை இரப்பது சாமானியமானதன்று; தனிப்பட்ட காரண மாகவே உங்களை இரக்கின்றேன் என்பாள் வேறு கொண்டும்மையான் இரந்தேன் என்கின் றாள். வேறு கொண்டிரத்தலுக்கு மூன்று காரணங்களை அருளிச் செய் கின்றார். ஒன்று; அப்பறவைகளிலும் இவை பல கால்களை யுடையவை. இரண்டு; இவை சபைக்கு அஞ்சாமல் வன்ள யத்தே இருந்து வார்த்தை சொல்லவும் మితుణ్ణణమి. மூன்று இவை தேன் உண்ணும் வண்டுகள். சாரக்ராகிழ்ான ஆசாரியர் களையோ சீடர்களையோ வண்டென்கின்றது. தேனையே தாரகமாகக் கொண்டிருக்கும் வண்டு. உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறியதேன்’ (பெரி. திரு. 4, 3:9) எனப்பட்ட பகவத் விஷயமாகிய தேனையே தாரக மாகக் கொண்டிருப்பார்கள் ஆசாரியர்கள். அடுத்து இப் பதிகத்தில் நாரை, புள்ளினம், அன்னம், கிளி, பூவை ஆகிய வற்றைத் தூதுவிடும் படியாகவுள்ள பாசுரங்களின் நயங்கள் விரி வஞ்சி விடப்பெற்றன. 3. பரத்துவ அந்தர் பாமித்துவத்தில் துனது : 'பொன்னுல காளிரோ? (6, 8) என்ற திருவாய்மொழி பரத்துவத்தை யும் அந்தர்யாமித்துவத்தையும் நோக்கித் தூது விடப் பெறுகின்றதாக அறுதியிட்டுள்ளனர் ஆசாரியர்கள். மாமது வார்தண்துழாய் முடிவானவர் கோனைக்கண்டு யாமிது வோதக்கவா றென்னவேண்டும் (கி)