பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii கல்விக் கழகத்தின் தலை:ராகவும், துரிவேதபுரீசர், ரீவரத ராஜம் பெருமாள் நூல் நிலையத்தின் செயலராகவும் பணி யாற்றிப் பொதுத் தொண்டில் தம்மை உட்படுத்திக் கொண்டவர். இன்னும் புதுவையிலுள்ள பல்வேறு மன்றங் களில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. இத்தனைக்கும் மேலாம'நல்ல மனிதர்". "பண்புடையார் கட்டுண்டு என்ற வள்ளுவத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். அடியேன்பால் மிக்க அன்புடையவர்.

இத்தகைய மாமனிதர்-வைணவமாமணி-பல நூல் களின் ஆசிரியர் - இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரமாலை” வழங்கிச் சிறப்பித்தது இந்நூல் பெற்ற பெரும்பேறாகும்: அடியேனின் பேறுமாகும். இப்பெரியாருக்கு அடியேனின் இதயங் கனிந்த நன்றி என்றும் உரியது. . இந்த நூலுக்கு அணிந்துரை அருளிச் சிறப்பித்தவர் பேராசிரியர் டாக்டர் தி. வைத்தமாநிதி. சுருக்கமாகச் சொன்னால் இவர் வைகுந்த வாசியான பேராசிரியர் அ. சீநிவாசராகவனின் இலக்கிய சமய வாரிசாகத் திகழ்ப வர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகளாகக் கல்லூரியில் இளங்கலை-முதுகலை ஆங்கிலத்துறையில் பேராசிரியராக வும் இறைத்தலைவராகவும் பணியாற்றியவர். பல நூல் களின் ஆசிரியர். அனைத்திந்திய ரீதியில் பல் வேறு கருத் தரங்குகளில் பங்கு கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கி யவர். சில கருத்தரங்குகளைத் தாமே இயக்குநராக நின்று நடத்திப் பல அறிஞர்களின் கவனந்தை ஈர்த்தவர். பல ஒப்பீட்டு இலக்கியக் கருத்தரங்குகளில் பங்கு கொண்டு ஆங்கில-தமிழ் இலக்கிய அணங்குகளின் வளப்பங்களை அறிஞர்கள் முன்வைத்துத் தம் இரு மொழிப் புலமையினால் இரு அன்னையர்களின் புகழை ஒளி பெறச் செய்து வருபவர். கல்வி, இலக்கியம், புதினம், பக்தி இலக்கியம், ஆசிரியம்