பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன் பாசுரங்கள்-துTதுபற்றியவை 3} { இதில் பறவை இனங்களை நோக்கி, நீங்கள் எம் பெருமான் பக்கலிற் சென்று எனது நிலைமையை உரைத்து வந்தால் அதற்குக் கைமாறாக தான் உங்களுக்கு உடயவிபூதிகளையும் பரிசளிப்பேன்’ என்கின்றாள். - கன்னலப் புள்ளினங்காள் நன்னலம் என்பதாலே தேக குணங்களும் ஆன்ம குணங்களும் சொல்ல விரும்பப் பட்டவை: ஆசாரியனிடத்தில் இரண்டும் உத்தேசியமாகும், விளையாட்டியேன் கான் இரக்தேன்; 'கை புகுந்தவனைக் கைகழியவிட்டு உங்கள் காலிலே விழும்படியான பாவத்தைப் பண்ணினேன். துரது செல்ல வேண்டும் என்று ஆழ்வார் நாயகி இரக்கின்றாள் அல்லள்; உபய விபூதியையும் உங்களுக்கு நான் கொடுக்க நீங்கள் அவற்றை ஆள வேண்டும் என்று இரக்கின்றாள், எம்பெருமானார் குழுவில் சீடர்கள் ஒர் ஆராய்ச்சி செய்தார்களாம். இவள் உபய விபூதியையும். கொடுத்து விட்டாளாகில் அவன் வந்தால் தானும் அவளும் எங்கிருப்பதென்று, அப்போது அனந்தாழ்வான் பணித் தாராம் - இக் குருவிகட்டின இடத்தே என்று. இரசிகமணி களின் சங்கையும் (வினாவும்) சமாதானமும் பரம போக்கிய மாயிருக்கும். ஈண்டு இன்னொரு வினாவும் எழுகின்றது." பொன்னுலகு ஆளிரோ என்று சொன்னது பொருந்தும்; அது சொன்ன வாயாலே புவனிமுழுதாளிரோ? என்று சொல்வது தகுமோ? உத்தேசியமான நித்திய விபூதியைக் கொடுத்தவள் தாழ்ந்ததாகவுள்ள லீலா விபூதியையும் கொடுக்கத் தேடவேண்டுமோ? என்று. இவை பண்ணுகிற உதவியை நினைத்து இன்னது கொடுப்பது என்றறியாமல் கலங்கிச் சொல்லுகின்றாள் ஆழ்வார் நாயகி என்று கொள்ளல் வேண்டும். என் காரியத்தைச் செய்துவந்து உபய விபூதிகளையும் ஆளலாம். எம்பிரான் திறத்து தன்னிலைமை உரைக்க வேண்டும் என்று சொல்லும் பரா ங் குச நாயகி