பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-தூதுபற்றியவை 313 இதில், கிளிகாள்! பெருமானைக்கண்டு என் காதலைச் சொல்லி ஓடிவந்து என் கையிருந்து இன்னடிசிலைப் பாலோடு நாள்தோறும் உண்ண வேண்டும்” என்கின்றாள். மையமர் வாள் கெடுங்கண்; பரிசனங்களோடு கூடிக் குலாவிச் 'சத்தான கருத்தைக் கொள்ள வேண்டும் என்று ஆசையாகை யாலே அதுதன்னைக் காட்டுகிறபடி, இது மையணித்த நெடுங்கண்களையுடைய மங்கைமார்கள் என்பதற்கு அழகிய உள்ளுறையாகும். ஈண்டு பக்தியை மை என்றும், கண் என்பதை ஞானம் என்றும் கொள்ள வேண்டும். கெய்யமர் இன்னடிசில் கிச்சல் பாலொடு மேவீரோ: நெய், அடிசில், பால் என்ற மூன்றைச் சொன்னதால் தத்துவம், இதம், புருஷார்த்தம் என்ற மூன்றையும் குறிப்பிட்டவாறு. 'உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்' (திருவாய் 6, 7 : 1) என்று இருக்கக் கூடியவளன்றோ இவள்? பகவானின் பெருமை, பாகவதரின் பெருமை, ஆசாரியரின் பெருமை என்ற மூன்றையும் சொல்லிற்றாகவும் கொள்ளலாம். மெய்யமர் காதல்; 'அவளுக்கு உன் பக்கலிலுள்ள சிநேகம் மெய்யான சிநேகம் என்று அவனுக்குச் சொல்லி’’ என்பது ஆறாயிரப்படி அருளிச் செயல். "திருமேனியிலே அனைய வேண்டும் படியான காதல் என்னுதல்; என் உடம்போடே யணைய வேண்டும் படியான காதல் என்னவுமாம்” என்பது ஈடு, கிளிகான்; கிளி வலையுள் அகப்படுமாப்போலே மாதரார் கயற் கண்என்னும் வலையுள் படாமல் ( ) தாமரைத்தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான் ( ) என்கின்றபடி எம்பெருமானுடைய திருக்கண்ணோக்க வலையில் அகப்பட்டும் கிளி வளர்த் தெடுப்பாருடைய கைவசம் இருப்பதுபோலே போஷகர் களாகிய ஆசாரியர்கட்கு அதீனர்களாக இருந்து கொண்டும்’ :சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை. என்றவாறு