பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள். தூதுபற்றியவை 315 தந்திடமாட்டார்; ஆகையாலே நீங்கள் சங்கையின்றிச் செல்லுங்கள்’ என்று சொல் வி அனுப்புகின்றாள். 'உங்களுக்கு யான் கற்பித்து வைத்த வார்த்தைகள் பலவும் உண்டே. தயிர்ப்பழம் சோற்றொடு பாலடிகிலும் தந்து பயிற்றிய சொற்கள் இல்லையோ? அவற்றைச் சொல்லிக் கொண்டே செல்லுங்கள்.’’ என்கின்றாள் 'துயவ அது சந்தானம் பண்ணிக் கொண்டே செல்லுங்கள்’ என்பது உள்ளுறை. - தீவினையேன் வளர்த்த ; உள்ளத்தைத் தொடும்படியான (மர்மஸ்பர்சியான பொருளை நம்பிள்ளை வெளியிட்டருள் வதைக் காணிச் என்னுடைய பாபம் இருந்தபடி பாருங்கோள்; அவனும் நானும் கூடஇருந்து உங்களைக் கொண்டாடுகை பன்றிக்கே உங்களைக் கொண்டு, காரியம் கொள்ளும்படியான பாபத்தைப் பண்ணினேன். வயிற்றில் பிறந்தாரை இடுவித்துக் காதலனை (அபிமதன்ை) அழைத்துக் கொள்ளுதலைப் போன்ற புன்மை இல்லையே” என்பதாக. இந்தத் திருவாய்மொழியில் ஆழ்வார் நாயகி இவற்றைத் தவிர வண்டினம், தும்பி, பூவை, குருகு பெருநாரை (புதா இனம்), அன்னம் இவற்றைத் தூது விடுவதையும் காண் கின்றோம். - - 4. அர்ச்சையில் துரது : திருமூழிக்களத்து எம்பெருமானின் அழகையும் குணங்களையும் பற்றாசாகக் கொண்டு அவன் பால் தூது விடுவதாகக்கொள்வது 'எம் கானல் அகம் கழிவாய் (9, 7) என்ற திருவாய்மொழி. தன் சோலையில் இரைதேடித் திரியும் நாரையைத் துனது போகுமாறு வேண்டு கின்றாள் பராங்குசநாயகி. எம்கானல் அகங்கழிவாய் இரைதேர்ந்திங் கினிதமரும் செங்கால மடகாராய்! திருமூழிக் களத்துறையும்