பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாகரங்கள்-துதுபற்றியவை 317. எம்பெருமான் தனது அடியார் குழாங்களுடன் திரு மூழிக் களத்தில் கலந்து பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒருகால் தன்னை (பராங்குசநாயகியை) மறந்திருத்தல் கூடும். அஃதன்றித் தன்னைப் புறக்கணித்தற்கும் காரணம் இல்லை. இந்நிலையிலிருக்கும் அவரைப் பார்த்துச் செய்தி சொல்லவேண்டும் என்று குருகினங்களை வேண்டுகின்றான் ஆழ்வார் நாயகி நுமரோடும் விரியாதே நீரும்தும் சேவலுமாய் அமர்காதல் குருகினங்கான்! அணிமூழிக் களத்துறையும் எமராலும் பழிப்புண்டு இங்கென் தம்மால் இழிப்புண்டு தமரோடு அங்கு உறைவாச்க்குத் தக்கிலமே கேளிாே(2) [நூமர்-உம் உறவினர்; சேவல்-ஆண்குருகு: எமர்-எம் உறவினர்; தமர்-அவருடைய உறவினர்; உறைவார்வசிப்பார்; தக்கிலம்-தகுதியுடையோம்; என்ற பாசுரத்தின் மூலமாக, எம்பெருமான் உகந்த அடியார் குழுக்களுடன் தானும் வந்து அடிமை செய்வற்குத் தகுதியற்றவளா என்று கேட்கு மாறு நாரையின் ஒரு பிரிவாகிய குருகினங்களைப் பணிக் கின்றாள். 'அவன் தன் அடியார்களுடன் கூடிக் குலவுவது போல் நீங்களும் உங்கள் உறவினர்களுடன் கூடி வாழ் கின்றீர்கள். அவன் இருக்கும் நிலை உங்கள் திறத்தில் பலித்துள்ளது. அங்ங்னமே என் திறத்திலும் பலிக்க வேண்டாவோ?’ என்கின்றாள். எம்பெருமான் அடியார் களுடன் கூடிவாழ்வது போலவும் குருகு தன் இனத்துடன் கூடி வாழ்வது போலவும், தானும் தன் காதலனாகிய எம்.