பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன் பாசுரங்கள்-தூதுபற்றியவை 319 வழகைப் பிரிந்தார் எங்ங்னம் உயிர் தரிப்பர் என்பதனை அறிவித்து விட்டால் உடனே புறப்பட்டு வந்து விடுவார் என்பதாகக் கருதுகின்றாள். எனவே, அவரது வடிவழகை அப்பறவைகட்குக் குறிப்பிடுகின்றாள். அவருடைய உறுப்பு கள் எல்லாம் செந்தாமரைபோல் இருப்பதால் அவருடைய திருமேனி தாமரையின் இலைபோல் உள்ளது என்கின்றாள். தாமான தன்மையில் எம்பெருமானுக்கும் தடாகத்திற்கும் ஒற்றுமைகாட்டி அவனை 'வாசத்தடம் (8.5 : 1) என்று கூறினவரன்றோ? ஆழ்வார் எம்பெருமானை முதன் முதலாகக்காண்பவர்களோடு அவரது திருக்கண்கள் முதலுறவு பண்ணும். கரியவாகிப் புடைபரந்து, மிளிர்ந்து செவ்வகி யோடி நீண்ட அப்பெரிய ஆயகண்கள் (அமலனாதி-8) கண்டாரைச் சொக்கவைத்துவிடும். அத்திருக்கண் நோக்குக் குத் தோற்றவர்களை அவருடைய திருக்கைகள் சேர்த்து அணைத்துக் கொள்ளும்; கைகள் அணைக்குங்கால், அந்த ஊற்றின்பத்திற்குத் தோற்றார் அவருடைய திருவடிகளில் விழுவர்; திருவடிகளில் விழுந்தாரை நல்ல சொற்கள் நல்கி அவர்களைத் தரிப்பிக்கும் அவனுடைய புன்முறுவல். இங்ஙனம் உறுப்புகளின் வனப்பையும் வடிவழகையும் காட்டி அடிமை கொண்டார் அவர். அவ்வடிவழகிற்குத் தோற்றுப் பசலையைத் தரித்திருப்பார் அவருக்குத் தகாதவரோ என்று கேட்குமாறு பணிக்கின்றாள் ஆழ்வார் நாயகி. 'தக்கிலமே கேளிர்கள்’ என்பதற்கு நம்பிள்ளை ஈடு: "நாம் ஒன்றிலே துணியும்படிக் கேட்டுப்பாருங்கள். அவர் இன்னும் இது வேணுமென் றிருந்தாராகில் பிராணன்களை வருந்தி நோக்கிக் கொண்டு கிடக்கவும், வேண்டாமென் றிருந்தாராகில் நாமும் ஒன்றிலே துணியும்படி அறுதியாகக் கேட்டுவிடுங்கோள்: அவர் இன்னும் 'இவள் வேண்டும் என்று இருந்தாராகில் பின்னின சடையினாலும் தூக்கிவிட்டுக் கொள்ளத் துணிந்த பிராட்டியைப்போல் ஏதாவதொரு