பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 சடகோபன் செந்தமிழ் வழியில் துணிவதாக உறுதி கொண்டு விருப்பம் ೬67-F? இல்லையா? என்ற இந்த இரண்டில் ஒன்று அறுதியிட்டுக் கொண்டு வாருங்கள்’ என்று வேண்டுகின்றாள். மேலும் தூது செய்ய ஆயத்தமாகவுள்ள குருகுக் கூட்டத்திலுள்ள ஓர் இளங்குருகினை விளித்து இவ்வாறு பேசுகின்றாள். - - பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழிக் கையார்க்கு எந்துர்ே இளங்குருகே திருமூழிக் களத்தார்க்கு ஏந்துபூண் முலைபயந்து என்இணை மலர்க்கண் நீர்ததும்பத் தாம்தம்மைக் கொண்டு.அகல்தல் தகவுஅன்று என்று உரையிரே (9) (பொன் ஆழி - அழகிய திருஆழி, பூண் ஆபரணம்: தகவு - தகுதி.) எம்பெருமானுடைய வடிவழகு நினைக்க நினைக்க ஆழ்வாரை உருக்கி விடுகின்றது என்பது இப்பாசுரத்தில் தெரிவிக்கப்பெறுகின்றது. "அன்னார் திருமுடியிலே திருத் துழாய்மாலை சாத்திக் கொண்டிருக்கும் அழகு ஒன்று மட்டிலும் போதுமே; அதற்குமேல் கையும் திருவாழியும் ஆன அழகு சுடராழியும் பல்லாண்டு. (திருப்பல்-1) என்று ஆலத்தி வழிக்கும்படியன்றோ உள்து? இவ்வழகுகளை நினைத்ததனாலன்றோ நான் பசலை நிறம் அடைந்தும் கண்ணிர் சோர்ந்தும் நிற்கின்றேன். இந்நிலையை அவருக்குப் புலப்படுத்துங்கள் என்று தெரிவிக்கின்றாள் பராங்குச நாயகி. எம்பெருமான் என்னை விட்டுப் iఖీః போகும்பொழுது தன்னுடைய திருமேனியை இங்கு விட்டன்றோ போயிருக்க வேண்டும்? அந்தத் திருமேனிதுை