பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டு அவற்றின் மேம் பாட்டைத் தமிழ் உலகுக்கு தவறாமல் அளித்துக் கொண்டு வருபவர். கம்பனில் மிக்க ஈடுபாடு கொண்டவர். ஆழ்வார் அவதரித்த திருக்குருகூர் மண்ணின் மைந்தராதலால்' ஆழ்வார்பாசுரங்களில் இயல்பாகவே ஈடுபாட்டுடன் வைணவ நெறியைத் தம்பேச்சாலும், எழுத்தாலும் ஒளிபெறச் செய்து கொண்டிருப்பவர். தற்சமயம் மதுரை-காமராசர் பல்கலைக் கழக திருக்குறள் ஆய்வு மையத்தில் திருக்குறள் பரிமேலழகர் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் சடு பட்டுள்ளார். அரைநூற்றாண்டாக என்பேரன்புக்கும் பெரு மதிப்பிற்கும் பாத்திரமான பேராசிரியர் பரமபதவாசி அ. சீநிவாசராகவனின் அணுக்கத்தொண்டர்; பருந்தும் நிழலும்போல் நின்று அவருடன் இணைந்து பல்வேறு பாங்குகளில் மொழி, இலக்கியம், கல்வி, போன்றதுறைகளில் அரும்பணி ஆற்றியவர். இப்போது சாத்துார் அருளிச் செயல் ஆய்வகத் தலைவராகவும், நெல்லை மாவட்டக் கம்பன் கழகத் தலைவராகவும் இருந்து கொண்டு சமய, இலக்கியப் பணிகளை ஆற்றிவருபவர். இத்தகைய கற்றுத் துறைபோய வித்தகர் பழகுவதற்கு இனியர்: பண்புடையார் பட்டுண்டு உலகம்’, ‘உயர்தினை என்மனார் மக்கட் சுட்டே என்ற பொன்மொழிகட்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர். ஆயினும், அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்ற வள்ளுவர் வாக்கை அணிகலனாகக் கொண்டவர். வைணவ நெறியின் உயிர் நாடியும் இதுதான்; அறிவோர்க்கழகு கற்றுணர்ந்து அடங்கல்தானே நம் முன்னோர் நமக்குக் காட்டிய ஒளி விளக்கு? இத்தகைய பேரன்பர், வைணவ சீலர், பெரும் பேராசிரியரின் அணிந்துரை பெற்றது. இந்நூலின் பெரும் பேறு; அடியேனின் பேறுமாகும். அணிந்துரை அருளிய அண்ணலுக்கு என் - இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். C