பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 சடகோபன் செந்தமிழ் தோன்றும். அங்ங்னமே சிறப்புப் பொருள்களை அருளும் நிலையில் ஆசாரியர்களும் இருப்பர். மேலும் மேகத்தை 'ஒளிமுகில்’ என்று விளித்து, எம்பெருமானையும் "ஒண்சுடர்' என்று குறிப்பிட்டிருப்பதிலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆசாரியர்கள் எம்பெருமானினின்றும் வேறுபட்டவர்கள் அல்லர் என்றும், இருவரும் எல்லாவற்றிலும் ஒப்புமை புடையவர் என்றும் காட்டற்காகவே இங்ானம் கூறப்பெற்ற தாக நாம் கொள்ளல் வேண்டும். - - பரமபதத்தில் காட்டும் பெருவிருப்பத்தை எம்பெருமான் தன் பக்கம் காட்டுவதாக ஆழ்வார் நாயகி கொள்வதால் தெளிவிசும்பு திருநாடாத் தீவினனயேன் மனத்துறையும்’ என்று குறிப்பிடுகின்றாள். நெஞ்சில் எழுந்தருளியிருக்கும் அவனைக் க்ண்ணால் காணமுடியவில்லையே என்று நைகின்றாள். துன்புறுபவர்களைக் காப்பதற்கென்று திருமுடியில் தனிமாலையிட்டிருக்கும் எம்பெருமானுக்குத் தன் விண்ணப்பத்தைத் தெரிவிக்குமாறு வேண்டுகின்றான். ஈண்டு ஆறாயிரப்படியின் அருளிச்செயல் சுவை மிக்கது. 'அவளுக்கு அருளிர் என்ன அமையுமோ? இன்னாருக் கருவீர் என்ன வேண்டாவோ என்னில் : "யாவள் ஒருத்தி யுடைய நெஞ்சை உமக்குத் திருநாடாகக் கொண்டு நீர் உறைகின்றிரோ அவளுக்கு அருளிர் என்று சொல்லிகோள் என்கின்றாள்' என்பதை எண்ணி எண்ணி மகிழ்வோமாக, சிறிது நேரத்தில் பராங்குச நாயகி சில அன்னங்களைக் காண நேரிடுகின்றது. அவற்றைப் பார்த்து வேண்டுகின்றாள். ஒருத்தியை இங்ங்னம் கலங்க வைப்பது அவருடைய பெருமைக்குத் தகுதியன்று என்பதை உணர்த்துமாறு செப்பு கின்றாள். - தகவுஅன்றுஎன்று உரையீர்கள் தடம்புனல்வாய் இரைதேர்ந்து மிகஇன்பம் படமேவும் மெல்நடைய அன்னங்காள்!