பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள்-துதுபற்றியவை 325 மிகமேனி மெலிவுஎய்தி மேகலையும் ஈடுஅழிந்துஎன் அகமேனி ஒழிய்ாமே திருமூழிக் களத்தார்க்கே (10) [தகவு - நியாயம்; தடம் - விசாலமான, அகமேனி அந்தரங்கமான உடல்) "தகவு அன்று என்று உரையீர்கள்’-என்பது இதயத்தில் தைக்கும்படியான சொல் என்பது ஆழ்வார் நாயகியின் திருவுள்ளம். எம்பெருமானது பிரிவினால் உடலும் மெலிந்து மேகலையும் தங்காதபடி சீர்குலைந்தது. இனி தன் ‘அகமேனி ஒழிவதற்குமுன் தன் நிலையைத் தெரிவிக்குமாறு அன்னங் &63); வேண்டுகின்றாள். எல்லா ஆன்மாக்களும் எம்பெருமானுக்கு உடலாக இருப்பினும் (சரீர-சரீரி பாவனை) தன் ஆன்மாவை அகமேனி என்று சிறப்பிக் கின்றார் ஆழ்வார். இவ்வுலகில் எம்பெருமானுக்குக் கிடைத்தற்கரிய மகாத்மா அன்றோ ஆழ்வார்? ஈண்டு ஆசாரியர்களே அன்னமாக விளிக்கப்படுகின்றனர் என்பது அறியத் தக்கது, தங்கட்குப் பேரின்பம் பயக்கும் நுண் பொருள்களைத் தேடுவதில் நோக்குடையவர்களாதலாலும் நல்ல நடத்தையை யுடையவர்களாதலாலும் அவர்கள் மென்னடைய அன்னங்கள்' எனப்பட்டனர். இவற்றைத் தவிர ஆழ்வார் நாயகி வண்டினம், தும்பி கள் ஆகியவற்றையும் தூது விடுகின்றாள். விரிவஞ்சி இவை பற்றிய பாசுரங்களின் நயம் காட்டப்பெறவில்லை. இங்கினம் ஆழ்வார் நாயகி பல இடங்களில் துது விட்டாலும் அடையத்தக்க பொருள் ஒன்றேயாகும். ஐந்து நிலைகளிலும் உள்ள எம்பெருமான் ஒருவரேயாவர். a_= b = c = d = e என்பது போல இடத்தின் வேற்றுமையே யொழியப் பொருளில் வேற்றுமை இல்லை. வைணவ சமயத் தத்துவப்படி ஐந்து நிலைகளிலுமுள்ள இறைவன் ஒருவனேயாவன். 13. ஆஹி. 157 (விளக்கம் காண்க)