பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையதுபவம் 329 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு (630) என்ற குறளில் இன்பம், துன்பம் என்று பகுத்துணர்வதையும் விட்டு வரும் துன்பத்தையே இன்பமாகக் கொண்டு கடமையைச் செய்துவந்தால் தம் பகைவரும் விரும்பத் தகுந்த சிறப்பு ஏற்படும் என்பர். இங்ங்ணம் உடல் தொடர்பின்றி உள்ளத்தே உண்டாகும் இன்பம் மிகச் சிறந்தது என்பது தெளிவு. ஆழ்வாருக்கு எம்பெருமானை நினைக்க நினைக்க அவர் உள்ளத்தெழுந்த இன்ப வெள்ளம் உடல் தொடர்பில்லாதது; அஃதாவது ஐம்பொறிகளால் உண்டாகும் இன்பம் அன்று அது, அஃது உயிரையொட்டிய இன்பமாகும். பொறிகளால் ஏற்படும்இன்ப மாயின், அவ்வப் பொறிகளால் அநுபவிப்பதற்குரிய பொருள் கள் இல்லாதபோது இன்பம் உண்டாதல் இல்லை. ஆழ்வார் எம்பெருமானை ஊனக் கண்ணால் கண்டிலர்; ஞானக் கண்ணுக்கு இலக்கான அவனை நினைந்து நினைந்தே இன்புற்றனர்; ஞானக் கண்ணால் கண்டு இன்புற்றனர்; அதனால் அவருடைய இன்பம் தடையின்றி நிகழ்ந்தது. உலகப் பொருள்களில் இன்பம் தரத்தக்க பல்வேறு பொருள்களால் உண்டாகும் இன்பம் எல்லாம் ஒருங்கு சேர்ந்தாற்போல் எம்பெருமானை நினைதலால், ஆழ்வார் உள்ளத்தில் இன்பம் உண்டாயிற்று. இத்தகைய அவர் நிலைமையை அவர்தம் பாசுர்ங்களில் கண்டு மகிழலாம். தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்திப்ப யானும் எம்பி ரானையே ஏத்தினேன்; யான் உய் வானே (4.3:10) என்ற பாசுரத்தில் தேன், பால், சருக்கரை, அமுதம் ஆகிய எல்லாவற்றின் இன்பமும் எம்பெருமானை