பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 சடகோபன் செந்தமிழ் நினைதலால் எனக்கு உண்டாகின்றது” என்கின்றார். "அப்படி இன்பம் உண்டாவதனால் யான் எம்பிரானை எப்போதும் ஏத்துகின்றேன்' என்கின்றார். "அப்படி அப் பெருமானை நினைந்து ஏத்தி இன்பம் அடைவதால்தான் யான் உயிர் வாழ்ந்திருக்கின்றேன்; அப்படியில்லாவிட்டால் யான் உயிர்வாழ்தல் இயலாது” என்கின்றார். 'யான் உய்வான் ஏத்தினேன்" என்பது இக்கருத்தைக் காட்டு கின்றது. உய்தல்-நற்கதி அடைதல் என்பதன்று இங்கு: உயிர் பிழைத்திருத்தல் என்பது பொருள். அப்பெருமானை நினைக்கும் அன்பே மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாத சோறும் நீறும் போல எனக்கு உண்னும் சோறும் பருகும் நீரும் ஆகும்’ என்கின்றார். . . . - இறைவன் அன்பினால் உண்டாகிய இவ்வின்பம் பொறி யுணர்ச்சியா லா யதன்று; பொறியுணர்ச்சியைக் கடந்து உயிரின்கண் உண்டாகியது என்று அவரே கூறுவார். வாரா அருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய் ஆனா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் (5.8:10) என்றும், வண்ணம் மருள்கொள் அணிமேக வண்ணா மாய அம்மானே எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே! (6.10:3) என்றும்வரும் பாசுரப் பகுதிகளால் ஆழ்வாருக்கு உண்டான இன்பம் தனி சிறந்தது, உயிரையொட்டியது என்பதை அறியலாம். இத்தகைய போக்கை இன்னும் பல இடங்களில் கண்டு மகிழலாம், . -