பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv பரமபதவாசி திரு. கே. சந்தானம் ரெட்டியார் தென் னார்க்காடு, மாவட்டம் சொர்ணாவூநைச் சேர்ந்தவர். * குலத்தளவே யாகுமாம் குணம்’ என்ற கூற்றுக் கேற்ப நற் குணங்கள் நிறையப் பெற்றவர். திருவரங்கம் பெரிய ஆச்ரமம் ரீமத் ஆண்டவன் சுவாமிகளின் ஆசிகம். கிலக்கானவர். நல்லோர் கூட்டத்தை என்றும் நாடி நிற்பவர். திருமால் திருவடிக்கே அற்றுத் தீர்ந்த நெஞ்சினர், திருமகள் திருவருள் நிறைந்தவர்; செல்வச் செழிப்புள்வவர். ஒழுக்கத்தால் உயர்ந்த உயர்குணச் செம்மல். பூதுர் பெரும் புலவர் கி. வேங்கிடசாமி ரெட்டியார் (நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பதிப்பாசிரியர்) அவர்களின் புருஷகாரத்தால் திருவேங்கடத்தான் திருமன்றம் கண்ட திருவருட் செல்வர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை நன்கு சோதித்து வெளி விடுவதற்கு நிதியுதவி அளித்து முழுப் பொறுப்பையும் ஏற்றவர், செல்வத்துப் பயனே ஈதல்: துய்ப்போம் எனினே தப்புத பலவே (புறந்-189) என்ற புறப்பாட்டின் பொருளை உணர்ந்த பொன்மனச் செம்மல். ஈத்துவக்கும் இன்பம் கண்ட ஏந்தல். திருவேங்கடவனை நெஞ்சில் நிறுத்திய நெறியினர். அவன் திருவடிவாரத்தில் அவன் பெயரால் நிறுவப்பெற்ற பல்கலைக் கலகத்தில் தமிழ்த்துறையில் இவர் ஒர் அறக்கட்டளை நிறுவி வைணவத்தையும் ஆழ்வார் பிரபந்தங்களையும் பரப்புவதில் பெருவிருப்பினர்; அதனைச் செய்யும் முன்னர் திருமால் திருவடியினைச் சென்றடைந் தவர். இவர்தம் குடிவழியினர் அதனை நிறைவேற்றினால் பரமபதத்தில் உள்ள இவர் ஆன்மா பூரித்து மகிழும்; மன நிறைவு கொள்ளும். இத்தகைய அன்பரின் அருந்தொண்டின் நினைவாக இந்நூலை அவருக்கு அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். பிரபந்தத்தை நன்முறையில் பதிப்பிக்கக் காரணமாக இருந்த இவர் ஆன்மா மன நிறைவு கொண்டு மகிழும் என்பது என் திடமான நம்பிக்கை. 'கம்மாழ்வான் தத்துவம் பற்றி ஆய்ந்து ஆய்வுக் கட்டுரை யைப் பெரிய அளவில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு