பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 சடகோபன் செந்தமிழ் ஆழ்வார் அவா என்று குறிப்பிடுவர். இந்த அவா இவர் தம் திருவிருத்தத்தில் முளை விடுகின்றது. தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும் ஐயருல் லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம் கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் கான் --திருவிரு. 84 |தையல் நல்லார்கள் - அழகிய பெண்கள்; குழாங்கள் . திரள்கள்: ஐயநல்லார்கள் - சிறந்த ஆண்கள்; விழவு - திருவிழா; கைய-கைகளிலுள்ள அவாவு வன்-ஆசைப்படுவன்) என்ற பாசுரத்தால் அறியலாம். இந்த அவா பெருகி வளர் வதை இவர் தம் பல பாசுரங்களால் அறியலாம். இதனைப் பின்னர் விளக்குவேன். 3. நெஞ்செனும் உட்கண்ணால் எம்பெருமானைச் சேவிக்கப்பெற்ற ஆழ்வார் அப்பெருமானை மீண்டும் எங்கேனும் காண ஆசைப்பட்டு அவனை நோக்கித் தன்னிலே உரைத்த வார்த்தை என்பது இதன் உள்ளுறைப் பொருள். தையநல்லார்கள் குழிய குழு என்பதன் ஸ்வாப தேசம் (உள்ளுறை)பரதந்திரராயிருக்கும் தன்மையே பிரதானமாக வுடைய பிரபந்தர்களின் திரள். ஐயநல்லார்கள் குழு’ என்பதற்கு ஸ்வாபதேசம் யாகம் முதலிய தொழில்களை நடத்தும் இயல்புடைய கைங்கரிய பிரவிருத்தி சீலர்களின் திரள். இப்பாசுரத்தின் அழகிய மணவாள சீயர் உரையில் - நாயகி யானவள் நாயகனான சர்வேசுவரனைப் புறம்பே திரளிட்ையாகிலும் காண ஆசைப்பட்டுப் புலம்பிய பாசுரம் இது' என்பர். மேலும் அவர், குழாங்கள் குழிய குழு என்கையால்ே அந்த சமூகந்தான் பலவாய்ச்சேர்ந்த சமுதாயத்தைச் சொல்லுகிறது’