பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையநுபவம் 335 திருவிருத்தத்தில் முளைவிட்ட ஆழ்வாரது அன்பு பெரிய திருவந்தாதியில் ஆறாகப் பெருகியோடத் தொடங்கு கின்றது. இதனைப் பல பாசுரங்கள் காட்டும். "நீ கேசின உபகாரத்தை வாய்விட்டுப் பேசினால் நீயே பெற்ற தாய்; பிறப்பித்த தந்தை; ஆன்மாவுக்கு உற்ற நன்மைகளைச் செய்து புதிய பிறப்பை நல்கும் ஆசாரியனும் நீ (3); என்னை அடிமைப் படுத்திக் கொண்டு என் கண்களுக்கு உன் திருமேனியின் ஒளியைக் காட்டியருள்க (13); எம்பெருமான் சாரணமற்ற கருணையினால் என் பாவங்களைத் தொலைக்கத் தொடங்கினபோது அடியேனும் அடியே னுடையநெஞ்சும் அச்செயலுக்குடன்பட்டிருந்தோம் (25): 'பால்ஆழிநீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்கால் ஆழும்: நெஞ்சு அழியும்; கண் சுழலும்' (34): அடியேன் வானோர் தொழுது இறைஞ்சும் எம்பெருமான் பொன்னார் திருவடிகளைச் சொற்களால் துதிக்கின்றேன் (45);மேகங்கள், பெரிய மலைகள், கருங்கடல், செறிந்த இருள், பூவைப் பூ, மற்றுமுள்ள கார் உருவங்களைப் பார்க்கும் போதெல்லாம் 'இவை கண்ணனின் அழகிய திருமேனி என்றெண்ணி என் மனம் என்னை விட்டு ஆங்கே ஒடும் (49); பூவைப் பூ , காயாம் பூ, செங்கழுநீர்ப் பூ, கரு நெய்தல் பூ ஆகிய வற்றைப் பார்க்கும் போதெல்லாம் அவை எம்பெரு மானுடைய திருவுருவமே என்று கருதி என் உடலும் உயிரும் பூரிக்கின்றன (73); நின்அன்றி மற்று இலேன் கண்டாய் . எனது உயிர்க்கு ஒர் சொல் நன்றி ஆகும் துணை (77); என் நெஞ்சே! எப்போதும், கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் (87) என்ற பாசுரங்களில் ஆழ்வாரது அன்பு ஆறாய்ப் பெருகியோடு வதைக் காணலாம். - பெரிய திருவந்தாதியில் ஆறாய்ப் பெருகியோடிய காதல் திருவாய்மொழியில் கடலாய் விரிந்து பெருகுகின்றது.