பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

家xXV டாக்டர் (பிஎச்.டி.) பட்டம்பெற்ற (1969-இல்) அடியேனுக்கு நம்மாழ்வார் பற்றி ஈரத்தமிழில் ஒரு பெருநூல் எழுதி வெளி யிட வேண்டும் என்ற பேரவா என்னிடம் அடிக்கடிக் குமிழி யிட்டுக் கொண்டே இருந்தது. அதற்கு ஆண்டவன் அருளும் ஆழ்வார் ஆசியும் யான் அடைவதற்கு இருபது ஆண்டுகள் ஆயின. இந்த நூலை யான் வெளியிடுவதற்கு என் இதயத் தேரை நடத்தித் தமிழ்ப்பணி, அறிவியல் பணி, சமயப் பணி ஆற்றுவதற்கு நல்ல உடல் நலத்தையும் மன வளத்தையும் நல்கி அந்தர்யாமியாக என் இதயத்தில் எழுந்தருளி யிருக்கும் முத்திக்கு வித்தகன் என்றே சுருதி முறையிடும் வேங்கடத்கி அச்சுதனை' மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்கிச் சரண் அடைகின்றேன். முன்னே பிறந்திறந்து மூதுலகிற் பட்டவெல்லாம் என்னே மறந்தனையோ என்நெஞ்சே!-சொன்னேன் இனி.எதிரா சன்மங்கள் இன்று முதல் பூதூர் முனி.எதிரா சன்பேர் மொழி." - பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் ந. சுப்புரெட்டியார் வேங்கடம்’ தொ. பே. 613583 AD.13, (பிளாட் 3354) - - அண்ணாநகர், சென்னை-600 040 நாள் : காந்தி ஜயந்தி 2-10-1989. . .ே திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் (திருப்பதி) மூலம். இந்த நூலைப் பல்கலைக் கழகமே வெளி யிட்டுள்ள்து, - - - 4. திருவேங். அத்.33 5. நூற். திருப். அந். 3.