பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையதுபவம் 34? சேதந்தத்துவத்தையும் விஞ்சும்படி வளர்கின்றது. இந்தப் பெரிய காதல் பெருக்கை சீவான்மா தாங்கிக் கொள்ள முடி அாதபடி மிகச் சிறிதாகவுள்ளது. 'ஆவியின் பரம் அல்ல வேட்கை' (10.3:2) அனு அளவினதான உயிர்ப் பொருளின் அளவன்று காதல், "என்தன், அளவன்றால் யானுடைய அன்பு’’ (இர. திருவந் 100) என்று பூதத்தார் கூறுவதுபோல, உயிரின் அளவு அன்று ஆயிற்றுக் காதல். . - - இங்கனம் வளர்ந்த காதல் எம்பெருமானுடைய மிகப் பெரிய காதலில் மூழ்கிவிட்டதை அருளிச் செய்கின்றார் ஆழ்வார். ... . . . - . . . சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில் . பெரும்பா ழேயோ சூழ்ந்தத னில்பெரிய பஏகன் மலர்ச்சோ தீயோ, சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான இன்ப மேயோ! - சூழ்ந்தத னில்பெரிய என்.அவன அறச்சூழ்ந் தாயே! (10.10:10) இது, மூன்று தத்துவங்களையும் விளாக்குலை கொண்டிருக் கும் தம் அவாவானது சிறிதாம்படி, அதாவது தம்முடைய காதல் குளத்தின் அளவு என்னும்படி, கடல் போன்ற காதலோடே எம்பெருமான் வந்து கலந்தான் என்பதைத் தெரிவிக்கின்றது. - - . . பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்து. மிகப் பெரிய துன்பத்தோடே கூப்பிட்டு இவர் வேண்டிக்கொண்ட படியே எல்லாவற்றாலும் நிறைந்த எம்பெருமான் வந்து கலந்தருளினான். இது கண்டு என்னுடைய அபரிமிதமான விடாய் எல்லாம் திரவந்து என்னோடே கலந்தாய்; என் னுடைய மனோரதமும் ஒருவாறு நிறைவேறப் பெற்றேன் என்று பேரின்பும் பொலிய விண்ணப்பம் செய்கின்றார்.