பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையதுபவம் 345 (7.9:10) என்று கூறி, அவ்வான்மாவும் அவனுடையதே என்று வற்புறுத்தி இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குச் செய்யக் கூடிய கைம்மாறு ஒன்றுமே இல்லை என்பதை எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே 19:10) என்று கூறி அமைவர். ஆகவே , இப்பாசுரங்களைத் 'தொண்டர்க் கமுதம் என்றும் அடியார்க்கு இன்பமாரியே’ என்றும் தாமே தம்மைக் கூறுவது எம்பெருமானைப் புகழ்வ தாகுமேயன்றி எவ்வாற்றானும் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டதாகாது. இறைவனே இவர் உள்ளிருந்து அருளிய தால் நம்மாழ்வாரின் பிரபந்தங்களைத் தமிழ்மறை" (தனியன்) என்றும், யாழின் இசை வேதம் என்றும் சொல்லத் தட்டில்லை. நம்மாழ்வாரையும் வேதம் தமிழ் செய்தமாறன்’ என்று கூறுவதும் பொருந்தும். - ஆழ்வாரின் இறையநுபவம்:நம்மாழ்வாரின் பாசுரங்களை ஆழ்ந்து கற்போர் அவரது பகவதநுபவம் இரண்டு வழிகளில் செல்வதைக் காணலாம். இவரிடம் ஞானம் தலை துக்கி நிற்குங்கால் தாமான தன்மையில் (அஃதாவது ஆழ்வா ராகவே நின்று) இருந்து கொண்டு ஆண்டவனை அதுபவித்து அந்த அநுபவத்தைப் பாசுரங்களாக வெளியிட்டுள்ளார். திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழியில் 73 பதிகங்கள் இந்த அநுபவத்தைக் காட்டுபவை. பிரேமம் (காதல்) முறுகி மீதுார்ந்து நிற்குங்கால் பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பெண் பேச்சாகப் பாசுரங்களை வெளியிட்டுள்ளார். திருவிருத்தம், திருவாய்மொழியில் 27 பதிகங்கள். இந்த அநுபவத்தைக் காட்டுபவை. பின்னவற்றின் விளக்கத்தை ஐந்து இயல் களிலும் முன்னவற்றின் விளக்கத்தை மூன்று. இயல்களிலும் கண்டு தெளியலாம். . - , - 7. இயல் 12, 14, 15 காண்க. -