பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அர்த்த பஞ்சகம் ഖ് பேற்றை அடைய விரும்பும் சேதநன் அறிய வேண்டிய பொருள்கள் ஐந்தாகும். இவற்றை முமுட்சுப்படி *அஞ்சர்த்தம் (சூத்திரம், 23) என்று பேசும். இதனை வைணவ நூல்கள் "அர்த்த பஞ்சக ஞானம்’ என்று குறிப் பிடும். அர்த்த பஞ்சகம் என்பது (1) ஈசுவரனின் இயல்பு, (2) ஆன்மாவின் இயல்பு, (3) ஆன்மா அடையும் பயன், (4) அப்பயனை அடைதற்கு உபாயம், (வழி) (5) அப்பயனை அடைதற்குப் தடையாய் உள்ளவைகள் ஆகிய ஐந்தும் ஆகும். பராசரபட்டர் இந்த ஐந்து பொருள்களையும் இரத்தினச் சுருக்கமாக, மிக்க இறை நிலையும் மெய்யாம் உயிர்கிலையும் தக்க நெறியும் - தடையாகித்-தொக்கியலும் ஊழ்வினையும் வாழ்வினையும் ஒதும் குருகையர்கோன் யாழின்இசை வேதத்து இயல்" 1. ஆ. ஹி. 211 காண்க (விளக்கம்) 2. திருவாய்மொழி தனியன் 16.