பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சடகோபன் செந்தமிழ் தானாயோ (10.10:5) என்றும் நாடோறும் புதிது புதிதாக இருக்கும் இந்த இனிமையின் தன்மையைச் சொல்வி, "உகந்து பணிசெய்துன பாதம் பெற்றேன்’ (10.8:10) என்று குணங்களை அநுபவித்தலாலுண்டாகும் பிரீதியினால் செய்யப்படும் கைங்கரியமே புருஷார்த்தம் என்னும் இடத் தைச் சொல்வி, இதுதான் உயிருள்ள அளவும் உள்ளதான புருஷார்த்தம் என்கைக்காக ஈதே இன்னம் வேண்டுவ தெந்தாய் (10.8:10) என்று முடிக்கையாலே பகவானுடைய குணங்களை அநுபவித்தலால் உண்டாகும் பிரீதியாலே செய்யப்படும் தொண்டே இன்று புருஷார்த்தம் அருளிச் செய்தார். இ ை1ே 4. பயனை அடைதற்குத் தடையாய் உள்ளவைகள் : விடுமின் முற்றவும் (1.2), சொன்னால் விரோதம் இது (3.9), ஒரு நாயகமாய் (4.1), கொண்ட பெண்டிர் (9.1) என்ற நான்கு திருவாய்மொழிகளும் பயனை அடைதற்கு இடைச் சுவரான தடைகளைப்பற்றிப் பேசுவன. விளக்கம் : இரண்டாம் திருவாய்மொழியில் விடுமின் முற்றவும் (1.2) என்று கட்டடங்கச் சொல்லி, அவற்றைமேல் மூன்று திருப்பதிகங்களால் விரித்து அருளிச் செய்கின்றார். சொன்னால் விரோதம் (3.9) என்ற திருப்பதிகத்திலே பணியத்தகாதாரைப் பணிதல் விடத்தக்கது என்கின்றார்; "ஒரு நாயகமாய் (4.!) என்ற திருவாய்மொழியில் ஐசுவர்ய கைவல்யங்கள் விடத்தக்கன என்கின்றார். கொண்ட பெண்டிர் (9.1) என்ற திருவாய்மொழியில் சரீரசம்பந்தம் காரணமாக வருபவை விடத்தக்கன என்கின்றார். இதுசரி, சாத்திரங்களால் விதிக்கப்பெற்ற ஐசுவரிய கைவல்யங்கள் புருஷார்த்தமாகத் தடை என்ன? என்று வினவலாம். ஐங் கருவி கண்ட இன்பமாகையாலும் கைவல்யம்-தெரிவ தரிதாய் அளவிறந்து இருந்ததேயாகிலும் பகவானுடைய அதுபவத்தை நோக்கச் சிற்றின்பமாகையாலும் இவற்றைத் 11. திருவாய் 4.9:10 -