பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சடகோபன் செந்தமிழ் (5.10 : 1) என்றும் போந்த பிரிநிலை ஏகாரத்தால், உபாயம் வேறொன்று இன்று; அத்திருவடிகளே எல்லாவற்றையும் தரவல்ல உபாயம் என்பதனையும் அருளிச் செய்தார். இப்படிப் பல இடங்களிலும் பிரபத்தி செய்தது அர்ச்சாவதாரத்திலேயாகும். 'பிறந்தவாறும். (5.10.1) என்ற திருவாய்மொழி ஒன்றிலுமேயிறே அதேவதாரத் திலே புகலப் புகுந்தது' என்ற பூர்வசனபூஷண வாக்கியம் ஈண்டு அநுசந்திக்கத் தக்கது. உபாயத்திற்கு அதிகாரிகள் : இனி, இந்த உபாயத்திற்கு அதிகாரிகள் யாவர் என்பதனையும் ஆழ்வார் பாசுரங் களாலேயே அறியலாம், 'மயர்வற மதிநலம் அருளினன்’ (1.1 : 1) என்றவிடத்தில் 'எனக்கு அருளினன்' என்பதில் தம்மைக் காணாமையால் ஆகிஞ்சந்யத்தையே முற் கொண்டு உபாயத்தை அறுதியிடும்போது "நோற்ற நோன் பிலேன் நுண்ணறிவிலேன்' (5.7 : i) என்று மூன்று வருணத்தார் மட்டிலும் செய்யக் கூடிய வேறு உபாயங்களில் அநந்வயமுகத்தால்" ஆகிஞ்சந்யத்தைப் பேசி, பற்றுகிற நேரத்தில் புகலொன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' (6.10 : 1.0) என்று சொல்வி, போக வேளையில் தமக்கு உண்டானவை அடங்க எம்பெருமா னுடைய திருவருளால் வந்தவை என்பதற்காக நீசனேன் நிறையொன்றுமிலேன்' (3.3 : 4) என்று கருந்தரையைப்' பேசி, ஒப்பில்லாத தீவினையேனை உய்யக் கொண்டு’ (1.9 : 4) என்று முடிக்கின்றார். ஆதலின் பாவமே செய்து பாவிகளான ஆன்மாக்களும் சென்று சேரலாம் என்று 18. பூர்வ ச. பூஷண-38 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 19. ஆகிஞ்சந்யம்-வேறு உபாயமும் வேறு கதியும் இல்லாமை. * 20. அநந்வயமுகம்-சம்பந்தம் இல்லாத தன்மை. 2. கருந்தரை-பாழ்நிலம்; ஒன்றும் இல்லாத இடம்’