பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 சடகோபன் செந்தமிழ் ஐந்தும், வாக்கு கால் கை வாய் உபத்தம் ஆகிய கருமேந்திரியங் கள் ஐந்தும்; மண் நீர் எரி கால் ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்தும்; இந்த லீலா விபூதியிலுள்ளி (இந்த உலகம்) ஆன்மாக்கள் பொருந்தியுள்ள மூலப்பிரகிருதி ஒன்றும்; மகத் (மான்) தத்துவம் ஒன்றும்; அகங்கார தத்துவம் ஒன்றும்; மனம் ஒன்றும் என்ற இருபத்து நான்காம். அசித்தின் இந்த இருபத்து நான்கு தத்துவங்களையும் கலந்துதான் ஈசுவரன் தானாகவும் நான்முகம் மூலமாகவும் இந்த அகிலத்தைப் படைக்கின்றான். く சத்துவ சூனியம் : காலதத்துவம் என்றும் இது வழங்கப் பெறும். இஃது எங்கும் பரவி நிற்கும் ஒரே திரவியம். இதில் சத்துவம் முதலிய பிரகிருதியின் மூன்று குணங்களும் இல்லை. எதிர், நிகழ், கழிவு முதலிய விகாரங்களுக்கு இதுவே காரணம் ஆகும். நிமிடம் விநாடி, நாழிகை முதல் பரார்த்தம் வரையிலுள்ள பகுதிகள் எல்லாம் இதனுடையனவே. இஃது ஈசுவரப் படைப்பின் பரிணாமங்களுக்குக் காரணமாய் . தோற்றம் ஈறு அற்றதாய், அவனுடைய படைப்பு, அளிப்பு, அழிப்பு ஆகிய விளையாட்டிற்குக் க்ருவியாய் அவனுக்கு உடலாய்த் திகழும். வைகுந்தத்தில் முன் பின் என்ற அளவிற் குக் காலம் உளதேயாயினும் அதன் சம்பந்தமின்றி அனைத்தும் எம்பெருமானது சங்கற்பத்தால் மட்டிலும் நடப்பனவாகும். மேற்கூறிய சுத் தசத்துவம், மிச்ரதத்துவம் ஆகிய அசித்தின் இரண்டு பகுதிகளும் ஈசுவரனுக்கும், நித்தியர் முத்தர் பத்தர் என்ற மூன்றுவித ஆன்மாக்களுக்கும்" T3 கித்தியர்-ஒரு நாளும் சம்சார சம்பந்த உணர்வு இல்லாத அனந்தன் கருடன், பெரிய திருவடி, சேனை முதலியார் (விஷ்வக்சேனர்) தொடக்க மானவர்கள் இவர்கள். முத்தர் என்பவர் இவ்வுலகத்தளைகள் களையப் பெற்றுப் பரமபதத் இல் பகவத நுபவ கைங்கரிய போகரானவர்களாவர். புத்தர்-இவர்கள் துக்கபரம்பரைகளை அநுபவிக் கின்ற சம்சாரிகள். -