பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத்திரயம் 36% போக்கியமாயும், போகத்திற்கு உபகரணமாயும், போகத்தை அநுபவிக்கத்தக்க இடங்களாயும் இருக்கும். சரீர-சரீரி பாவனை ஈசுவரனுக்கு அடிமையாகவுள்ள (சேஷமாகவுள்ள) ஆன்மா ஆன்மாவை விட்டுப் பிரிந்திராத உடலைப்போல் சேவியான (ஆண்டான்) ஈசுவரனையொழியவும் தான் வேறாகக் காணப்பெறுதல் இல்லை. இந்த முறையில் ஒவ்வோர் ஆன்மாவும் ஈசுவரனின் உடலாக இருக்கும். இங்ஙனமே அசித்தின் மூன்றுபகுதிகளும் ஈசுவரனுக்கு உடலாகத் திகழ்கின்றன. அதாவது சேத நாசேதநங்கள் எம்பெருமானின் சரீரமாக அமைந்துள்ளன. இந்நிலையைச் சரீர-சரீரி பாவனை (உடல் - உயிர் உறவு) என்று வழங்கப்பெறும். இது, திடவிசும்பு எரிவளி நீர்கிலம் இவைமிசைப் படர்பொருள் முழுவதும் ஆய்அவை அவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரக்தெங்கும் பரந்துளன் (1.1 7) என்ற பாசுரத்தில் விளக்கம் அடைகின்றது. உண்டான ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறையுமாப்போலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருப்பான் இறைவன். நம்முடைய உடலுக்கு ஆன்மாதான் தாரகமாய், நியாமகனாய், சேஷியாய் இருப்பதுபோல அந்த உடலான்மாக்களுக்கு எம்பெருமான் தான் தாரகமாய் நியாமகனாய் சேவியாய் இருப்பான் என்றபடி, இதே கருத்து, நீர்ஆய் கிலன்ஆய் தீஆய் காலனிய் கெடுவானாய் : 24 دسمیه