பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத்திரயம் - - - - - - -- . . . . . . - - - - - - - - 371 அவன் ஞானம் சக்தி பலம் ஐசுவரியம் வீரியம் தேஜஸ்" முதலிய மங்களகுணக் கூட்டங்களால் அலங்கரிக்கப் பெற்றவன். இவனிடம் இக்குணங்கள் ஆதல் அழிதல் இன்றி எப்பொழுதும் நி ைற ந் தி ரு க் கு ம். இவற்றைத் தவிர வாத்சல்யம், செளசீல்யம், செள லப்பியம் முதலிய எண்ணற்ற குணங்களையும் கொண்டவன் அவன். இவ்வுலகத் தினைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் காரணபூதன். இதனை நம்மாழ்வார், இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான் (1.9 : 1) 5. ஞானம் . எல்லாத் தேசங்களிலும், எல்லாக் காலங் களிலும் உள்ள எல்லாப் பொருள்களின் பண்பு பண்பிகளையும் ஒன்றொழியாமல் ஒரே காலத்தில் $$oń L-fruit நோக்குதல். சக்தி : உயிர்கள் யாவற்றையும் ஒரே காலத்தில் நடத்தும் சக்தி. பலம் : தன் சங்கற்பத்தினால் எல்லாப் பொருள் களையும் தரிக்கும் வன்மை. ஐசுவரியம் : எல்லாப் பொருள்களையும் நியமித்து நட்த்தும் சாமர்த்தியம் வீரியம்:உலகப்பொருள்யாவற்றையும் உண்ட்ாக்கித் தான் , யாதொரு விகாரமுமின்றி இருத்தல்; தளச்ச்சியின்றி இருத்தலுமாம். தேஜஸ்; மற்ற எல்லாப் பொருள்களின் பிரகாசத்தை மறைக்கும் தன்மை. 6. வாத்சல்யம் : கன்றினிடம் பசு இருக்கும் இருப்பு; அதாவது குற்றத்தையும் குணமாய்க் கொள்ளும் அன்பு, செளசீல்யம் உயர்ந்தவன் தாழ்ந்தவனோடு புரையறக் கலக்கை. செளலப்பியம் : எளியனாய் இருக்கும் இருப்பு. சுவாமித்வம் : உடையனாய் இருக்கும் இதுகுனம், அறிவு. எல்லாப் பொருள் களையும் ஒரே காலத்தில் காணவல்ல அறிவு. சக்தி : சாமர்த்தியம். -