பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத்திரயம் 373 பங்கயக் கண்ணன் (3, 7 :1), மாசறு சோதி என் செய்யவாய் மணிக் குன்றம் (5.3 : 1) என்ற ஆழ்வாகின் திருவாக்குகளைக் காண்க. இத்தகைய உருவம் யோகியரின் தியனாத்திற்கு ஏற்றது. . காகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற காராயணனே.உன் ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்ந்ததே (8. 3 : 3) என்று ஆழ்வார் கூறுவதனால் அறியலாம். இந்த உருவத் துடன் அவன் பெரியபிராட்டியார். பூமிப்பிராட்டியார், நீளா தேவி ஆகியோர்க்கு நாயகனாக இருப்பவன். மேலும்: முந்நீர் ஞாலம் படைத்த எம்முகில் வண்ணன் (3.2 : 1) . என்பதால் இத்திவ்விய மங்கள உருவத்துடன் இருந்து கொண்டே இறைவன் படைத்தல் முதலிய செயல்கள்ை மேற்கொள்வான் என்பது பெறப்படும், ஐந்து திருமேனிகள் : எம்பெருமானின் திருமேனி பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற &站弱 நிலையில் இருக்கும். பரம் என்பது, பரமபதத்தில் எழுந், தருளியிருக்கும் பரவாசுதேவனுடைய உருவம், கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்துள்ளே வெண்பல் இலகுண்டர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர் முடியன் கான்கு தோளன் குனிசார்ங்கன் ஒண்சங்குகதைவாள் ஆழியான் ஒருவன் (8, 8 : 1)