பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 சடகோபன் செந்தமிழ் என்று இந்தத் திருமேனியைக் காட்டுவார் ஆழ்வார், வியூகம் என்பது, வாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்தியும்னன் அநிருத்தன் என்ற உருவங்கள்; இவை திருப்பாற்கடலில் இருப்பவை. இதனை, ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடர் ஆய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே (4. 3 : 3) என்று காட்டுவார். இதனைத் திருமழிசை யாழ்வாரும் ஏக மூர்த்தி, மூன்று மூர்த் தி, நாலு மூர்த்தி (திருச்சந்த, 17) என்று விளக்குவர். விபவம் என்பது, எண்ணற்ற அவதார மூர்த்திகள். "ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரான் (1. 7 : 3) என்பதால் கிருஷ்ணாவதாரத்தை யும், கொம்புபோல் சீதைபொருட்டு இலங்கை நகர், அம்பு எரி உய்த்தவர் (4, 2 : 8) என்பதால் இராமாவதாரத்தையும் இங்ங்ணம் பிற அவதாரங்களையும் சுட்டுவார். அக்தர்யாமி என்பது, எல்லோருடைய இதய கமலத்தில் எழுந்தருளி யிருக்கும் நிலை. மாயன் என்நெஞ்சில் உள் ளான், மற்றும் எவர்க்கும் அதுவே" (1. 9 6) என்பதில் இந்நிலையைக் காணலாம். அர்ச்சை என்பது, திவ்விய தேசங்களில் திருமேனி கொண்டு எழுந்தருளியுள்ள நிலையும், மற்றும் பக்தர்களின் வேண்டுகோளின்படி அவரவர் விருப்பத்திற் கேற்றவாறு திருமேனி கொண்டு நிற்கும் நிலையும். 'முடிச்சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ? அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? (3. 1:1) என்று அழகரை நோக்கி ஆழ்வார் பேசுவதில் இந்நிலையைக் காணலாம்.