பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத் திரயம் 377 தாரம்," என்று முமுட்சுப்படி குறிப்பிடும். இதனால்தான் நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணம் அடைகின்றார். ஆழ்வார்கள் பலவிடங்களிலும், பிரபத்தி பண்ணியது அர்ச்சாவதாரத்திலே' என்று பூர்வசன பூஷணமும் பேசும். பிரபத்தியின் முழு விவரங்களையும் பூர்வசன பூஷணத்திலும் முமுட்கப்படியிலும்’ விவர மாகக் காணலாம். 3, புருஷார்த்தம் இஃது ஆன்மா அடைய வேண்டிய குறிக்கோள் நிலையைக் குறிப்பிடுவது. அஃதாவது நலமந்தம் இல்ல தோர் நாடு புகுவது. இந்த நாட்டை வள்ளுவர் பெருமான் வரன் என்னும் வைப்பு (குறள் . 25) - எல்லா உலகத் திலும் மேம்பட்ட வீட்டுலகம்; வானோர்க்கு உயர்ந்த உலகம் (குறள் - 346).தேவர்களாலும் அடைய முடியாத வீட்டுலகம்; வானம் (குறள் - 353) . வீட்டுலகம் என்றெல் லாம் விளக்குவர். நம்மாழ்வார் இவ்வுலகை வைகுந்தம்: (1.2:11, 2. 5:11, 4.4: 1; 5, 10; 11), இலங்குவான் (3. 8:11), (பொன்னுலகு (6.7; 11) என்று குறிப்பிடுவர். இதுவே பரமபதம் ஆகும். முக்தி நிலையை அடைந்த ஆன்மா இங்கு எம்பெருமானுக்கு அடிமை செய்து (கைங் கசியம் செய்து) அநுபவிக்கின்றது. - தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக பண்டே பரமன் பணித்த பணிவகையே (10. 4:9) 19. முமுட்சு-139 10. பூர்வுச், பூஷ, 38 . . . . . . . . 11. ரீவ்ச பூஷ முதல் பிரகரணம் (புருஷகார வைபவமும் உபாயுவைபவமும்) இரண்டாம் - * : - பிரகரணம் (உபாயம்) என்பவற்றில் காண்க. 12. முமுட்சுப்படி-துவகம், சூத்திரங்கள் 23.140.