பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரங்கள் . 379 அதில் ஏறி மறைந்திருக்கும் நான்காம் வேற்றுமை (லுப்த சதுர்த்தி) சேஷத்துவத்தையும், உகாரம் அந்த சேஷத்து வத்தின் அநந்யார்ஹத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈசுவரனுக்கே உரித்தாயிருத்தல்) தெரிவிக்கும். சேர்ந் திருக்கும் நிலையைச் சம்ஹிதாகாரம் என்றும், பிரிந் திருக்கும் நிலையை "அசம்ஹிதாகாரம்' என்றும் சொல்லுவர். ஆகவே இம்மந்திரத்தை அநுசந்திக்கும் போது அடியிற் கண்டவாறு பொருள்படும். அ- சகல ஜகத் காரண பூதனாய், எல்லாவற்றையும் காப்ப வனாய், பெரிய பிராட்டியாருக்குக் கணவனாய், எல்லாவற்றுக்கும் தலைவனாய், அநந்த கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான். ஆய - (லுப் தசதுர்த்தி) - பொருட்டு ம - அடிமைத் தன்மையை அநுட்டிப்பவனாய், தேகத்தைப் பார்க்கிலும் பரனாய், அணுவாய், நித்திய னாய், ஞாநானந்தமான அடியேன் சேஷ பூதன் (அடிமைத் தன்மையுடையவன்) - உ- பிறருக்குச் சேஷ பூதன் அல்லன். கம -எனக்கு நானும் சுதந்திரன் அல்லன்: எம்பெருமா னுக்கே வசப்பட்டிருப்பவன் (பரதந்திரன்). எனக்கு எம்பெருமானே உபாயமும், உபேயமும். நான் பாகவதர் வரையிலும் சேஷபூதனாய், பரத ந் தி ர ன - ப் இருப்பவன், நாராயண-எல்லாவற்றுக்கும் ஆதாரமாய், எங்கும் அந்தர் யாமியாய், எங்கும்நிறைந்திருப்பனவாய், எல்லோர்க்கும் 3. கிங்கர்ன் - வேலையாள். கிங்கரன் செய்வது கைங் கரியம், அதாவது, தொண்டு. ‘. . . 4. இந்த விளக்கத்தைப் பெரியவாச்சான் பிள்ளை அருளிய நிகமனப் படி யிலும் காணலாம்,