பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 சடகோபன் செந்தமிழ் எளியனாய், எல்லோக்கும் உபேயமாய், எல்லா உறவும் உடையவனாய், பெரிய பிராட்டியாரோடு சேர்ந் திருப்பவனான எம்பெருமானுடைய முக உல்லாசத்தின் ஆய - பொருட்டு; “இந்தக் கைங்கரியம் நான் பண்ணு கின்றேன், இந்தக் கைங்கரியம் என்னுடையது.' என்ற அகங்கார மமிகாரம் இன்றி, எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும், எல்லா நிலைகளிலும் பண்ணும் எல்லாவிதத் தொண்டுகளையும் செய்வதாகக் கருணை காட்டும்படிப் பிராத்திக்கின்றேன். - இந்தத் திருமந்திரத்தின் பொருள் நம்மாழ்வாரின் பிரபந்தங்களில் பொதிந்து கிடக்கின்றன. இதனை விளக்கு வேன். திருமந்திரத்தின் "ஓம் நமோ என்பவற்றின் பொருள் திருவிருத்தத்திலும், நாராயணாய' என்ற பதத்தின் பொருள் திருவாசிரியத்திலும் கூறப்பெற்றுள்ளன. *உயிரளிப்பான், எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய். (திருவிருத். i) என்றதனால் பிரணவத்தின் முதல் எழுத்தான அகாரத்தில் அவரட்சணே' என்ற தாதுவின் பொருளான இறைவனுடைய காக்குந் தன்மையைக் கூறினராவர். மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே (டிெ - 1) என்றதனால் அவனால் பாது காக்கப்படும் பொருளாய் அகாரத்தில் ஏறிக் கழிந்த ஆய’ என்ற நான்காம் வேற்றுமையாலும் (லுப்தசதுர்த்தி) பிரணவத்தின் இரண்டாம் எழுத்தான உகாரத்தாலும்' சொல்லுகிற படியே வேறொருவருக்கும் ஆகாது அனனுக்கே அடிமையாய், சரீரத்தின் வேறு பட்டதாய், ஞான ஆனந்த வடிவமாகவுள்ள, மூன்றாம் எழுத்தான மகாரத்தில்’ சொல்லப்பெறுகின்ற ஆன்ம சொரூபத்தைச் சொல்லின ராவர். - - - r பிரணவத்தில் அகாரத்தின்மேல் ஏறிக் கழிந்த நான்காம் வேற்றுமை (லுப்த சதுர்த்தி) இலக்கண விதிப்