பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 -- " - சடகோபன் செந்தமிழ் இரண்டாம் பத்து : இந்தக் கைங்கரியத்திற்கு விரோதி யாகிய உலகத் தொடர்பின் சம்பந்தத்தையும் கழித்து" "ஒளிக் கொண்ட சோதியுமாய் உடன் கூடுவது என்று கொலோ? (2.3:10) என்றதனால் தாமும் வேண்டிக் கொண்டு நலமந்தம் இல்லதோர் நாடு புகுவீர் (2 8:4) என்றதனால் பிறர்க்கு உபதேசிக்கையாலே இவர்க்குப் பரமபதத்திலே நோக்காயிருந்தது' என்று நினைந்து இறைவன் பரமபதத்தைக் கொடுக்கப்புக, எம்மா வீட்டுத் திறமும் செப்பும் (2.9:t) என்றதனால் 'எனக்கு அதில் ஒரு நிர்ப்பந்தம் இல்லை என்றும், "தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே (2.9:4) என்றதனால் அவனுக்கேயாய் இருக்கும் இருப்பே எனக்கு வேண்டுவது என்றும் இப் புருஷார்த்தத்தை அறுதியிடுகின்றார். மூன்றாம் பத்து : இவர்க்குக் கைங்கர்யத்திலுண்டான ருசியையும் விரைவையும் கண்ட இறைவன் கைங்கரியத் திற்கு ஏகாந்தமான திருமலையில்" நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு 'வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம் (3.3:1) என்று பாரித்து, பாரித்த படியே பாகவதர் களுக்கு அடிமையளவாக வாசிகமாக அடிமைசெய்து தலைக் கர்ட்டுகின்றார்." ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத் 3. திருவாய் 2.3:10, களிப்பும் கவர்வும் அற்றுப் இறப்பும் பிணி முப்பு இறப்பு அற்று என்றதனைத் திருவுள்ளத்தே கொண்டு என்க. பி. சதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும்; ஒன் மைதோய் சோதி மணிவண்ண! எந்தாய்" (29:2) என்ற் பாசுரத்தைத் திருவுளத்தில் கொண்டு இவ்வாறு கூறினார். 7. கிளரொளியிளமை (2.10), ஒழிவில் காலமெல் லாம் (3.3) என்ற திருப்பதிகங்களைத் திருவுள்ளத் தில் கொண்டு இங்ங்னம் கூறினார், 8. பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை (3,7) என்ற திருப் பதிகத்தைத் திருவுள்த்த்ே கொண்டு இவ்வாறு கூறினார். -