பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரங்கள் 38? தின் பின் வாக்கியமாகிய, ரீமதே நாராயணாய நம!’ என்னும் வாக்கியத்தின் முதலிரண்டு பதங்களின் பொருளை முதற் பத்தாலும், நம: என்னும் மூன்றாம் பதத்தின் பொருளை இரண்டாம் பத்தாலும் அருளிச் செய்தார் எனவும். முதலிரண்டு பத்துகளில் கூறப்பெற்ற இறை வனுக்குச் செய்யும் கைங்கரியம் அவனுடைய 'அடியார்க்கு அடிமை என்ற அளவில் சேர வேண்டும் என்று அறுதியிட்டு, அங்ஙனம் அறுதியிட்டதற்குத் தகுதியாகத் தங்கிது அநுட்டானத்தையும் மூன்றாம் பத்தால் அருளிச் செய்தார் எனவும் தெளிய முடிகின்றது. கான்காம் பத்து : இப்புருஷார்த்தத்திற்கு உபாயம் 'திருநாரணன் தாள்’ (4.1:1) என்றும், விரோதி 'குடி மன்னும் என் சுவர்க்கம் (4.:1:9), எல்லாம் விட்ட இறுகலிறப்பு (4.1:10) என்பனவற்றால் ஐசுவரிய கைவல்ய விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து. ஐங்கருவிகண்ட இன்பம் தெரிவரிய அளவிலாச் சிற்றின்பம் (4.10) என்று தாமும் சொல்லிப் போந்தார். § - ஐந்தாம் பத்து : விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பமில்லாதவற்றை நீக்குவதற்கும் ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் (5.7:10) என்றதனால் இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தார் என்கின்றார். - - ஆறாம் பத்து அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக அலர் 9. சேர்ப்பாரை முன்னிட்டு என்றது வைகல் பூங் கழிவாய் (6.1) பொன்னுலக்ானீரோ (5.8) என்ற இரண்டு திருப்பதிகங்களில் துரது விடுகின்ற் முகத்தால் ஆசாரியனை முன்னிட்டுக் கூறு கின்றார் என்பதை அறிக.