பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 சடகோபன் செந்தமிழ் மேல் மங்கை உறைமார்பா! உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந் தேன்’ (6.10:10) என்றதனால் ஏற்றுக் கொண்டார். ஆக, இம் மூன்று பத்துகளாலும் துவயத்தின் முன்வாக்கியமாகிய "பூர் மந் நாராயண சரணெள சரணம் பிரபத்தியே! என்ப தன் பொருள் கூறப்பெறுகின்றது. ‘பூரீமத்', 'நாராயண சரணெள' என்ற இதன் முதலிரண்டு பதங்களின் பொருளை நான்காம் பத்தாலும், சரணம் பிரபத்தியே என்னும் மூன்றாம் பதத்தின் பொருளை ஐந்தாம் பத்தாலும், அருளிச் செய்தார் எனவும், அங்ஙனம் அருளிச் செய்தவாறே, ஆசாரியனை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷ காரமாக இறைவனைப் பற்றும் தம்முடைய அநுட் டானத்தை ஆறாம் பத்தால் அருளிச் செய்தார் எனவும் தெளியலாம். ஏழாம்பத்து : இங்கினம் சித்தோபாயத்தை" ஏற்றுக் கொண்டிருந்தும் அது சடக்கெனப் பலியாமையால் துயருற்ற வராய்' கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்!” (7.1:2) என்று தொடங்கி உபாயத்திற்கு உபயோகப்படும் குணங்களைச் சொல்லிக் கூப்பிட, கூராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால், வாராய் (6.9:1) என்று இவர் ஆசைப் பட்டபடியே வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தி (7.31) வந்து காட்சி அளித்தான்; அளித்த இது, மானச அநுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே பிரிந்தபடியை அருளிச் செய்கின்றார். ‘பாமருமூவுலகும் 10. சித்தோபாயம் :- சித்தமாக இருக்கும் உபாயம், அதாவது, இறைவன். - 11. உண்ணிலாவிய (7.1) என்னும் திருப்பதிகத்தை நோக்கி இவ்வாறு கூறினார்.