பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரங்கள் 391 என்பதுவே இது. இது இரண்டு வாக்கியமாகப் பதினொரு பதமாய் முப்பத்திரண்டு எழுத்துகளாக இருக்கும். இதன் விரிவை முமுட்சுப்படி, தேசிகப் பிரபந்தம் என்ற பனுவல் களில் கண்டு தெளியவாம். இந்த மந்திரத்திலும் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியத்தில் சர்வதர்மாந் + பரித்யஜ்ய + மாம் - ஏகம் + சரணம் - வ்ரஜ என்ற ஆறு பதங்களும்;இரண்டாம் வாக்கியத்தில் அகம் + த்வா - சர்வபாபேப்ய மோட்சி யிஷ்யாமி + மாசுச என்ற ஐந்து பதங்களும் இரண்டு வாக்கியங்களிலும் முப்பத்திரண்டு எழுத்துகளும் உள்ளன. இனி, இப்பதினொரு பதங்களின் பொருளைக் காண்போம். சர்வதர்மாங் : சுருதி சு மி ரு தி சோதிதங்களாய் யோக்கியதையை உண்டு பண்ணும் நித்திய நைமித்திகங் களோடு கூடிய கர்ம, ஞான, பக்தி, யோகங்களாகிற 総.む」「rリf பரித்யஜ்ய முத்துச் சிப்பியில் ரஜதபுத்தி பண்ணு வாரைப் போலவும், விபரீத திசாகமநம் பண்ணுவாரைப் போலவும், அநுபாயங்களில் உபாயபுத்தி பண்ணினோம் என்கின்ற புத்தி விசேடத்தோடும், ருசி வாசனைகளோடும், நாணத்தோடும் கூடியவனாய் மீண்டும் அவற்றில் (உபாயங் களில்) தொடர்பு ஏற்படாத வண்ணம் அறவே விட்டு, நித்திய நைமித்தியங்களை மாத்திரம் சைங்கரிய ரூபமாகச் செய்து கொண்டு ஸ்வபர விநாச ஹேதுவாய் ஸ்வ ருபாய புருஷார்த்தங்களுக்கு ஹாநியான நிஷித்த கிருத்தியங்களைச் செய்யாமல் . - மாம் : வாத்சல்ய, சுவாமித்துவ, செள சீ ல் ய, செளலப்பிய கணவிசிஷ்டனான என்னை, ஏகம்-யே, நீ செய்யும் ஸ்விகாரத்தில் உபாய பாவனை பண்ணாமல் -