பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரங்கள் . 393 உபாயங்களை நீக்குதலைச் சொன்னவராவர். வெம்கோட்டு ஏறு ஏழ் உடனே, கொன்றானை மனத்துக் கொண்டு (மேற்படி-48) என்றதனால் சரமசுலோகத்தில் மாமேகம் சரணம் வ்ரஜ"-"என்னையே சரணமாகப் பற்று" என்கின்ற’ மனத்தால் பற்றுதலாகின்ற சரணமடைதலைத் தெரிவித்தவ ராவர். சீரார், மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன்வானோர், இனத்தலைவன் கண்ணனால் யான் (மேற்படி 25) என்றும், எம்மிறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து-வல்வினையைக் காணும் மலையும் புகக்கடிவான்’ (மேற்படி-26) என்று வரும் திருப்பாசுரங்களால், சரம சுலோகத்தில் 'அகம் த்வா சர்வபாபேப்யோ மோட்ச இஷ்யாமி'- நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கின்றேன்’ என்று உபாயமாக இருக்கின்ற கண்ண பிரான் எல்லாப் பாவங்களினின்றும் விடுவித்தலைத் தெரிவித்தவராவர். வானோ மறிகடலோ (மேற்படி 54) என்று தொடங்கி வன்துயரை மருங்கு கண்டிலமால்' (மேற்படி-54) என்று பாவங்களானவை போன இடம் தெரியாதபடி 'நானும் வேண்டா நீயும் வேண்டா, அவை தன்னடைவேவிட்டுப்போம்” என்கின்ற இஷ்யாமி என்கின்ற ரிைச்சின்'" பொருளைக் கூறினாராவர். அடர்பொன் முடியானை (மேற்படி-70) என்று தொடங்கி யாதாகில்? யாதே இனி என்று இனி, கர்மம் இருந்து என்? நசித்து என் யாதானால் நமக்கு என்வரும்? என்றதனால் 'மாசுச :'துக்கப்படாதே" என்ற பதத்தால் போதருகின்ற பாரம் அற்றிருத்தலைச் சொல்லுகையாலே, உபாயத்தைச் சொல்லுகின்ற பெரிய திருவந்தாதி சரமச் சுலோகத்தோடே சேரும் என்பதாயிற்று. v3} 19. மோட்சிஷ்யாழி' என்னும் வினைச்சொல்லில் 'இஷ்யாமி என்ற பகுதியை 'னிச்சு என வட மொழியாளர் கூறுவர்.