பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 5 வருகின்றது. தாம் பிறந்த நாடு வழுதி நாடு என்பதனையும் பல பாசுரங்களில் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். (3) நம்மாழ்வாருக்கு மகிழம்பூ மாலை சிறப்பு மாலை யாக வழங்குதல் மரபு, 'நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன் மாறன் சடகோபன் (திருவாய் 4.10:11) என்று கூறப்பெற்ற தனால் இந்த வழக்கு அகச்சான்றாக அமைகின்றது. இவருடைய அவதாரச் சிறப்பைப் பற்றிப் பேசும் பூருவாச்சாரியர்களின் திருவுள்ளத்தை ஆராய் ந் து பேசுமிடத்துப் பலபடியாகப் பேச இடத்தருகின்றது." இவற்றையெல்லாம் நோக்குமிடத்து, நித்திய சம்சாரி யாய்ப் போந்தாரொருவர் நிர்ஹேதுக பகவத் கடாட்ச விசேடத்தாலே இங்ங்ணம் திருந்தினார் என்னும் அதுவே சம்பிரதாய நிர்வாகம்' என்று பெரியோர் பணித்திருப்ப தாகக் கூறுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் சேமம் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ காமம் பராங்குசமோ காரணமோ-தாமத் துளவோ வகுளமோ தோளிரண்டோ கான்கும் உளவோ பெருமான் உனக்கு, என்பன போன்ற பாசுரங்களுக்கிணங்க ஆழ்வாரை பகவதவதாரம் என்று கொள்ளுதலே இவருடைய மிக்க பெருமைக்குப் பொருத்தமாக அமைகின்றது. திருப்புளியாழ்வார் : எம்பெருமான் அவதாரம் செய்த தற்கு முன்னதாகவே அப்பெருமானுக்குப் பல்லாற்றானும் அடிமை செய்தலையே உறுதொழிலாகக் கொண்ட திருவனந்தாழ்வான் (ஆதிசேஷன்) இக்குழந்தையின்மீது 7. ஆசாரிய ஹிருதயம்-92 ஆம் குத்திரத்தையும் அதன் உரையையும் கண்டு தெளிக.