பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சடகோபன் செந்தமிழ் வெயில் மழை முதலியன படாதிருக்குமாறு ஒரு பெரிய புளிய மரமாகப் பொலிந்துநின்ற பிரான் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலின் உள்ளே வெளிச் சுற்றில் அவதரித் திருந்தார் என்பது சம்பிரதாயமாக நம்பி வரும் ஒரு திரு நிகழ்ச்சியாகும். - திருக்குறுங்குடி நம்பியின் திருவருளால் அவதரித்த திருக்குழந்தை பிறந்தநாள் தொட்டு அழுதரற்றுதல், பால் பருகல் முதலான மக்கள் இயல்பு ஒன்றுமின்றியும் வாட்டம் சிறிதும் இல்லாதும் பரிபூரணராக இருத்தும், ஆதிசயத்தைக் கண்டு பெற்றோர்கள் ஒரு பக்கம் அதிசயிடும் மற்றொரு பக்க ம் வருத்தமும் கொண்டிருந்தனர். பிற ந் த பன்னிரண்டாம் நாளில், உலகில் ஏனைய குழந்தைகளின் இயல்புக்கு மாறாக இருந்தமையால், அக்குழந்தைக்குப் பெற்றோர் சூட்டிய திருநாமம் மாறன் என்பது. பின்னர் பெற்றோர்கள் சிறிதும் கவலைப்படாமல் திருக்குருகூரில் எழுந்தருணியிருக்கும் திருக்கோயிலுக்கு எடுத்துச் சென்று பொலிந்து நின்ற எம்பெருமானைச் சேவிக்கச் செய்வித்து அவன் திருமுன் விட்டனர். அக்குழந்தை அத்திருக் கோயிலி லுள்ள புளிய மரத்தடியில் சென்று அமர்ந்தது. ஆழ்வா ராகிய அக்குழந்தை எழுந்தருளியிருந்த காரணத்தால் அந்தப் புளியமரத்தைப் பின்னுள்ளோர் திருப்புளியாழ்வார் என்று சிறப்பாக வழங்க லாயினர். பெ. ற் றோர்க ளு ம் திருப் புளியாழ்வார் அடியிலேயே ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டிவிலே கிடத்தி வளர்த்து ஓம்பி வரலாயினர். குழந்தையும் பதினாறாண்டு வரையில் கண் விழித்துப் பார்த்தல், பேசுதல் முதலிய செயல்கள் ஒன்று மின்றி இறைவனையே நினைந்த வண்ணம் அமர்ந்திருந்தது. 8. மூலவர் : ஆதிநாதன்; பொலிந்து நின்ற பிரான், தாயார் ஆதிநாதவல்லி, குருகூர் நாயகி. இவர் கட்குத் தனிக்கோயில் உண்டு. .