பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 7 கருவிலிருக்கும் பொழுது ஞானமுடையனவாயிருக்கின்ற குழந்தைகளைப் பிறந்தவுடனே தனது பரிசத்தால் (ஸ்பர்சம் - தொட்டு உணர்தல்) அ ஞ் ஞ ா ன த் தி ற் கு உள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலியன செய்யும் தன்மையதான சடம் என்னும் வாயு இவரையும் பிறந்த பொழுது தொடுதற்கு வர அப்பொழுது இவர் அதனை ஹாங்காரத்தாலே ஒறுத்து ஒட்டினமையால் இவருக்குச் *சடகோபுர்’ என்றும் திருநாமம் உண்டாயிற்று என்று வைணவர்கள் சம்பிரதாயமாகக் கொள்வர். இத்திருநாமமே பின்னர் பெருவழக்காக வழங்கலாயிற்று. இவர் அருளிய திருப்பாசுரங்களின் பதிகங்கள்தோறும் வரும் இறுதிப்பாசுர மாகிய பல சுருதிப் பாசுரத்தில் (திருக்கடைக்காப்புச் செய்யுளில்) சடகோயர்’ என்ற முத்திரையும் பெறலாயிற்று. இவர் நம் பெருமாளால் நம்மாழ்வார் என்று அபிமானிக்கப் பெற்று கடைக்கண் நோக்கிற்கு இலக்காகி மற்றை யாழ்வார் களனைவரிலும் உயர்வு பெற்றதனால் நம்மாழ்வார்’ என்று ஒரு திருப்பெயர் பெறலாயினர். இதுவே இன்று மக்கள் வாக்கில் பெருவழக்காக நிலை பெற்று விட்டது. தம்பக்கல் திருமுள்ளம் உவந்து பொலிந்து நின்ற பிரான் பிரசாதித் தருளிய மகிழமலர் மாலையைத் தரித்தனால் வகுளாபரணர் என்றும், பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது திவ்வியப் பிரபந்தங்களில் கூறிய தத்துவார்த்தங்களால் செருக்கடக்கி அவர்கட்கு மாவட்டி என்னும் கருவிபோல் இருத்தலால் பராங்குசர் என்றும் வேறு திருநாமங்களும் இவருக்கு ஏற்படலாயின. திருமாலின் அவதாரம் என்று சொல்லும்படி வீறுபாடுடைய இந்த ஆழ்வார் பல காரணங்களால் ஆழ்வார் களின் தலைவராகக் கருதப் பெற்று அவரை அவயவியாகவும் மற்றைய ஆழ்வார்களை அவயவங்களாகவும் பூருவர்கள்