பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ சடகோபன் செந்தமிழ் மெய்ப்பித்தனர். இவருக்குத் திருமுடிநிலை நம் பெருமாள் {அரங்கநாதன்). ஒரு பழைய வடமொழி சுலோகத்தின்படி இவருக்குப் பூதத்தாழ்வார் திருமுடியாகவும், பொய்கை பேயாழ்வார்கள் கண்களாவும், பெரியாழ்வார் திருமுக மண்டலமாகவும், திருமழிசையாழ்வார் கண்ட மாகவும், குலசேகராழ்வார் திருப்பாணாழ்வார் இவர்கள் திருக்கை களாகவும், தொண்டரடிப் பொடியாழ்வார் மார்பாகவும், திருமங்கையாழ்வார் கொப்பூழாகவும், மதுரகவி யாழ்வாரும் எம்பெருமானாரும் (இராமாநுசர்) திருவடிகளாகவும் இருப்பதாகச் சம்பிரதாயமாக உரைப்பர். குருவுபதேசம் : இப்படிப்பட்ட சடகோபர் பதினாறு வயதளவும் கண் விழியாமல் மெளனமாக எழுந்தருளி யிருப்பதைக் கண்ட பெற்றோர்கள் இவர் தம்மைப் போன்ற நிலையுடையாரெவரையும் உலகத்தில் காணாமையால் யாரோடும் பேசாமல் உள்ளார்’ என்பதை அறியாமல் ‘எம்பெருமான் விஷயத்தில் நாம் செய்த அபசாரம் ஏதேனும் உண்டோ? என்று கருதிக் கலங்கியிருந்தனர். அப்போது பரமபத்நாதனது நியமனப்படி சேனைமுதலியார் என்கின்ற விஸ்வக்சேனர் யாரும் இல்லாதபோது தனிமையில் எழுந்தருளி இவருக்குத் திருவிலச்சினை செய்து எல்லாவித மந்தரார்த்தங்களையும் உபதேசித்தருளினார்." 9. இது போன்ற நிகழ்ச்சி ஒன்று சைவ சமயத்திலும் காணப்படுகின்றது. திருவெண்ணெய் நல்லூரில் "சுவேதவனப் பெருமாள்” என்னும் பிள்ளைத் திருநாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவருக்கு வான்வழியாகச் சென்ற பரஞ்சோதி மாமுனிகள் (சத்திய ஞானதரிசனிகளின் ஆாணாக்கர்) தம் வழி வழி உபதேசத்தைச் செய்து தென்றார் என்பது வரலாறு, இரண்டு வரலாறுகளும் ஒப்பு நோக்கி உணர்த்தக்க்ள்ை.