பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் § நம்மாழ்வார் ஒதாது உணர்ந்த ஞானச்சிறப்புடையவர் என்று அவர் வரலாற்றால் அறிகின்றோம். - அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து அறியா மாமயத்து அடியேனை வைத்தாயால்' (அறியாக்காலம் - மிக்க இளம் பருவம்; அடிமைக்கண் தொண்டு செய்யும் தொழிலில்; அன்பு - ஆவல்; அறியா - அறியாமையை விளைவிக்கும்; மாமாயம் - சம்சாரம்: என்பது ஒரு பாசுரம். இந்த அகச் சான்றினால் அவர் அறிவு தோன்று தற்குரியதல்லாத மிக்க இளம்பருவத்திலேயே இறைவனிடத்துப் பேரன்பு கொண்டவராயினர் என்றும், அங்ங்னம் அன்பு கொள்ளுமாறு இறைவன் அருள் புரிந்தான் என்றும் இப்பாசுரப் பகுதியால் அறிகின்றோம். இதனால் ஆழ்வார் ஒதாது உணர்ந்த ஞானச் செல்வர் என்பது ஒருவாறு தெளிவாகின்றது. மதுஸ்ர கவிகளின் சக்திப்பு: திருக்குருகூருக்கு இரண்டு கல் தொலை லுள்ளது திருக்கோளுர் என்ற திவ்வியதேசம். 'நவ திருப்பதிகளில்" ஒன்பதாவது (எம்பெருமான் வைத்தமா நிதி; தாயார் கோளுர் வல்லி நாச்சியார்). நம்மாழ்வாரின் அந்தரங்க சீடரான மதுரகவிகள் அவதரித்த திவ்வியதேசம். நம்மாழ்வார் என்ற ஞானசூரியன் அவதரித்த சில ஆண்டு 10. நவ திருப்பதிகள் : திருக்குருகூர், திருக்கோளுர், தென்திருப்பேரை-இவை மூன்றும் பொருநை யாற்றின் தென்கரையிலிருப்பவை. மற்றவை பூரீவைகுண்டம், வரகுணமங்கை (நத்தம்). திருக் இளந்தை , திருப்புளிங்குடி, தொலைவிலி மங்கலம் (இரட்டைத் திருப்பதிகள்) ஆகிய ஆறும் பொருநை யாற்றின் வடகரையிலுள்ளன.)